🛡️இன்று (ஏப்ரல் 7, 2026) தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது.
- மாநிலம் முழுவதும் சுமார் 7,150-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் இன்று (ஏப். 07) தேர்தல் அதிகாரிகளால் சரிபார்க்கப்படும்.
- தகுதியுள்ள வேட்பாளர்கள் தங்கள் மனுக்களைத் திரும்பப் பெற விரும்புபவர்கள், வரும் ஏப்ரல் 09, 2026 மாலை 3 மணி வரை கால அவகாசம் உள்ளது.
- தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23, 2026 அன்று வாக்குப்பதிவு நடைபெறும்





