தமிழக பட்ஜெட் 2026-07ன் முக்கிய அம்சங்கள்

சென்னை:
நடப்பு நிதி ஆண்​டுக்​கான (2026-27) பொது பட்ஜெட்​டை தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்​கல் செய்தார்.
தமி​ழ​கத்​தில் நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்றி பெற்று சில கூட்​டணி கட்​சி​களின் ஆதர​வுடன் தவெக ஆட்சி அமைத்​துள்​ளது. அக்​கட்​சி​யின் தலை​வர் விஜய், புதிய முதல்​வ​ராக கடந்த மே 10-ம் தேதி பதவி​யேற்​றார். புதி​தாக பொறுப்​பேற்ற தவெக அரசின் முதல் சட்​டப்​பேர​வைக் கூட்​டம் ஆளுநர் உரை​யுடன் கடந்த ஜூன் 19-ம் தேதி தொடங்​கியது.
இந்​நிலை​யில் நடப்பு நிதி ஆண்​டுக்​கான (2026&-27) பொது பட்​ஜெட்​டை தாக்​கல் செய்​வதற்​காகச் சட்​டப்​பேரவை இன்று (ஆகஸ்ட் 5) கூடியது. அதன்​படி காலை 10 மணிக்கு, பொது பட்​ஜெட்டை நிதி​யமைச்​சர் மரிய வில்​சன் தாக்​கல் செய்தார். தவெக அரசின் முதல் பட்ஜெட் இதுவாகும். அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய அம்சம் வருமாறு:
ரூ.10 லட்சம் கடன் உள்ள இக்கட்டான சூழலில், மாநிலத்தை நிதி நெருக்கடிகளில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சிங்கப்பெண் திட்டம், 200 யூனிட் இலவச மின்சாரம், 717 டாஸ்மாக் கடைகள் மூடல் எனப் பல்வேறு சாதனைகளை தமிழக அரசு செய்துள்ளது. டெண்டர் முறைகேடுகளை தமிழக அரசு தடுத்துள்ளது என்று பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றின் விவரம் வருமாறு:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயத் தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றும் நோக்குடன், பெண்களுக்கு முன்னுரிமை வழங்க மண்ணின் மகள் திட்டம் செயல்படுத்தப்படும். இதன்மூலம் முத்திரைத்தாள் வரி மற்றும் பதிவுக் கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கப்படும். விவசாயம் செய்திட நவீன தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்படும். இதற்காக ரூ. 5.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் செயல்படுத்த ரூ.165 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இது ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் தொழில் முன்னவுத் திறனை ஊக்குவிக்கும் திட்டம்.
இதன்மூலம் மூலதண மானியம் மற்றும் கடன் வழங்கி தொழில் தொடங்க ஆதரவு அளிக்கப்படும். பொருளாதார முன்னேற்றம் மற்றும் தன்னிறைவு நோக்கில் செயல்படுத்தப்படுகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தவும், நிலையான வளர்ச்சியை உறுதிசெய்யவும் ‘வெற்றி தொழில் முனைவோர் திட்டம்’ செயல்படுத்த தமிழ்நாடு 2026- 27 பட்ஜெட்டில் ரூ.75 கோடி நிதி ஒதுக்கீடு.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்கு ரூ.17,150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல தமிழ்நாடு கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். இதற்காக ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
விளையாட்டில் ஆர்வமும் திறமையும் கொண்ட 8 முதல் 18 வயதுக்கு உட்பட்ட இளம் பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்க்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ.1051 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டுக் கல்வி உதவித் தொகைத் திட்டம், நடப்பாண்டில் 352 மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படும். முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.131 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
‘வெற்றித் தமிழகம்’ என்ற பெயரில் தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தவுள்ளோம்.
பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.44,527 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
10,000 அரசுப் பள்ளிகளில் ‘சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ்’ திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.139 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
பெருந்தலைவர் காமராஜர் சிறப்புப் பள்ளிகள் அமைக்க ரூ.125 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
5000 அரசுகப் பள்ளிகளிலிருந்து கூடுதலாக 2,600 பள்ளிகளுக்கு ஜிழி ஷிறிகிஸிரி விரிவுபடுத்தப்படும்.
பாடத்திட்டை மறுசீரமைப்பு செய்ய ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
‘போதையில்லா தமிழ்நாடு’ திட்டத்துக்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு. பள்ளிகளில் போதைப் பொருள் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஹெல்மெட், குடிநீர் பாட்டில் வைக்கும் வசதிகள் கொண்ட சைக்கிள் வழங்கப்படும். இதற்காக ரூ.277 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
பள்ளி பாடத்திட்டம் மறுசீரமைப்புக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
பொது நூலகங்களை டிஜிட்டல் நூலகங்களாக மாற்ற ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
உயர் கல்வித் துறைக்கு ரூ.8393 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2000 கோடியில் ‘வெற்றி மடிக்கணினி திட்டம்’ செயல்படுத்தப்படும்.
போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சியளிக்க கூடுதலாக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
ரூ.90 கோடி மதிப்பீட்டில் 5 புதிய தொழில்பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்படும்.
2031-ம் ஆண்டுக்குள் பொறியியல கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் 5 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்கப்படும்.
உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டு வருகிறார்.
தவெக அரசின் முதல் பட்​ஜெட் என்​ப​தால் திட்​டங்​கள் பொது​மக்​களை கவரும் வகை​யில் இடம்​பெறும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. அந்த வகை​யில் மகளிர் உரிமைத் தொகை உயர்​வு, இளைஞர்​களுக்​கான வேலை​வாய்ப்​புத் திட்​டங்​கள் உட்பட பல்​வேறு அறி​விப்​பு​கள் இடம்​பெறுமா என்ற எதிர்பார்ப்புகள் மக்கள் பட்ஜெட்டை கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
பட்​ஜெட் மீதான விவாதம் முடிந்​தவுடன் தொடர்ந்து துறை​கள் வாரி​யாக மானியக் கோரிக்கை மீதான விவாத​மும் அமைச்​சர்​களின் பதி​லுரை​யும் இடம்​பெறும். இதற்​காக சுமார் ஓரு மாதம் வரை சட்​டப்​பேர​வைக் கூட்​டம் நடத்த வாய்ப்​பு​கள் உள்​ள​தாக கூறப்​படு​கிறது.

தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேர விசாரணைக்கு தடை: உயர் நீதிமன்றம்

சென்னை:தவெக எம்​எல்​ஏ​விடம் குதிரை பேரத்​தில் ஈடு​பட்​ட​தாக, திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸார் பதிவு செய்​துள்ள வழக்கு

மூத்த வல்லுனர்களின் கருத்தை கேட்டு காவிரி பிரச்சனைக்கு தீர்வு: தவெக அரசுக்கு எடப்பாடியார் அறிவுரை

சென்னை:சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாளையொட்டி கிண்டியில் உள்ள

தமிழக பட்ஜெட் 2026-07ன் முக்கிய அம்சங்கள்

தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேர விசாரணைக்கு தடை: உயர் நீதிமன்றம்

சென்னை:தவெக எம்​எல்​ஏ​விடம் குதிரை பேரத்​தில் ஈடு​பட்​ட​தாக, திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸார் பதிவு செய்​துள்ள வழக்கு

மூத்த வல்லுனர்களின் கருத்தை கேட்டு காவிரி பிரச்சனைக்கு தீர்வு: தவெக அரசுக்கு எடப்பாடியார் அறிவுரை

சென்னை:சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாளையொட்டி கிண்டியில் உள்ள