தமிழக வரலாற்றில் முதன் முறையாக ஒரே நாளில் 42.37 கோடி யூனிட் மின் பயன்பாடு

சென்னை:
தமிழக வரலாற்றில் முதன்முறையாக ஒரே நாளில் அதிகபட்சமாக 42.37 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2.67 கோடி மின் நுகர்வோர் பேர் உள்ளனர். தினசரி மின்தேவை சராசரியாக 15 ஆயிரம் மெகா வாட் ஆகும். இதில் விவசாயத்தின் பங்கு 2,500 மெகா வாட். பொதுவாக கோடை காலத்தில் 16 ஆயிரம் மெகா வாட் மற்றும் குளிர் காலத்தில் 12 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் பயன்படுத்தப்படும். இந்த ஆண்டுக்கான கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், வீடுகளில் ஏசி, மின் விசிறி, ஏர்கூலர் உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, தினசரி மின்தேவை 16 ஆயிரம் மெகா வாட் என்ற அளவைத் தாண்டிவிட்டது. விவசாயப் பிரிவில் கூடுதலாக வழங்கப்பட்ட 1.50 லட்சம் மின் இணைப்புகளால், அந்தப் பிரிவில் மட்டும் மின்சாரப் பயன்பாடு கூடுதலாக 727 மெகா வாட் அதிகரித்துள்ளது. இத்தகைய காரணங்களால், கடந்த மாதம் 4-ம் தேதி தினசரி மின்தேவை முதல் முறையாக 17,584 மெகா வாட்டாக அதிகரித்தது.
இதற்கு முன் 2022 ஏப். 29-ம் தேதி 17,563 மெகா வாட் பயன்படுத்தப்பட்டிருந்தது. இதேபோல, கடந்த மாதம் 15-ம் தேதி தினசரி மின் தேவை 17,647 மெகா வாட்டாக அதிகரித்தது. ஆனால், அதற்கு அடுத்த நாள் மின் நுகர்வு 18,053 மெகா வாட்டாக அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியது. இதற்கிடையே, ஒரு நாள் முழுவதும் பயன்படுத்தப்படும் ஒட்டுமொத்த மின்சாரத்தின் அளவு யூனிட்டாக கணக்கெடுக்கப்படுகிறது.
இதன்படி தமிழக வரலாற்றில் முதன்முறையாக ஒரே நாளில்அதிகபட்சமாக 42.37 கோடி யூனிட்மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “தமிழக வரலாற்றில் முதன்முறையாக தமிழகத்தின் 42.37 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த தேவை எவ்வித தடையுமின்றி பூர்த்தி செய்யப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.