தமிழ்நாடு அரசுத் துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறும்
ஓய்வூதியர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்கள் எளிதில் வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க
ஆண்டு முழுவதும் ஓய்வூதியர் நேர்காணல் மேற்கொள்ள வழிவகை செய்ய ஏதுவாக
அரசாணை எண். 165 நிதி (ஓய்வூதியம்) துறை நாள் 31.05.2023ல் வெளியிடப்பட்டது.
அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சியில்,
- ஓய்வூதியம் பெறுபவர்கள் ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் எந்த மாதம் ஒய்வு
பெற்றார்களோ அந்த மாதத்தில் வாழ்நாள் சான்று அளிக்க வேண்டும். - ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் ஆகிய இரண்டும் பெறுபவர்கள்
ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியம் பெறுபவரின் ஓய்வு பெற்ற மாதம் கணக்கில்
கொண்டு வாழ்நாள் சான்று அளிக்க வேண்டும். - குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், கருணைத் தொகை ஒய்வூதியம் பெறுவோர்
மற்றும் சிறப்பு ஓய்வூதியம் பெறுவோர் ஒவ்வொரு ஆண்டும் அவர்களுக்கு
குடும்ப ஓய்வூதியம் தொடங்கப்பட்ட மாதத்தில் வாழ்நாள் சான்று அளிக்க
வேண்டும்.
4. ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் மற்றும் சிறப்பு பிரிவு ஓய்வூதியம் பெறுபவர்
அவர்கள் உயிர்சான்று அளிக்கப்பட வேண்டிய மாதத்தில் அளிக்க தவறினால்
அடுத்து வரும் ஒரு மாதம் சலுகை அளித்து அச்சலுகை மாதத்திற்குள்
உயிர்வாழ்சான்று அளிக்காத பட்சத்தில் அடுத்து வரும் மாதத்திலிருந்து
ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் நிறுத்தப்படும்.
- இந்த ஆண்டு (2023) ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் உயிர்வாழ் சான்று
அளிக்கப்பட வேண்டிய ஓய்வூதியர் / குடும்ப ஓய்வூதியர் 2023-2024ஆம்
ஆண்டுக்கான சிறப்பு நிகழ்வாக ஜூலை 2023ல் வாழ்நாள் சான்று
அளிக்கலாம். - Digital Life Certificapte (DLC) through Jeevan Pramaan Portal by using the
services of any of the following entities as per the option of the
pensioners.
India Post Payments Bank (IPPB) with Door Step Services
e -Seva centers / Common Service Centers (CSC) -
Pensioner’s Associations having biometric Device Connected with
Jeevan pramaan portal.
Submission of Life Certificate through Post.
Direct Mustering (Physical Appearance).
சிறப்பு நிகழ்வாக, பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்து 2023
ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள்/குடும்ப
ஓய்வூதியர்கள் அனுமதிக்கப்பட்ட ஓய்வூதியம்/குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் நேரில்
வாழ்நாள் சான்று அளிக்க விருப்பமுள்ளவர்கள் 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம்
முதல் ஆகஸ்ட் மாதம் வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல்
மாலை 4.30 மணி வரை ரிப்பன் கட்டட வளாகத்தில் தலைமையிடத்தில் நடைபெறும்
சிறப்பு முகாமிற்கு ஓய்வூதிய புத்தகம் அசல், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆதார்
அட்டையுடன் நேரில் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதர மாதங்களில்
உயிர்சான்று அளிக்க வேண்டிய ஓய்வூதியர்கள்/குடும்ப ஓய்வூதியர்கள்
ஒய்வூதியப்பிரிவில் உயிர்வாழ் சான்றிதழ் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.







