தருமபுரி மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்திற்கு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் வருகை

தருமபுரி:

தருமபுரி மாவட்ட தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க அலுவலகத்திற்கு தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட நூற்றாண்டுகள் பாரம்பரிய மிக்க தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் வெ.மகேந்திரகுமார், அவர்கள் வருகை புரிந்தார்.
மாவட்டத் தலைவர் அ.மாணிக்கம் தலைமையில் செயலாளர் தா.கந்தசாமி, பொருளாளர் பி.ஜெயபால், துணைத் தலைவர்கள் சி.எம்.ஜெயபால், எஸ்.தேவி, இணைச் செயலாளர் எஸ்.முத்துக்குமார் மற்றும் பி.அசோகன், வெங்கடேஸ்வரன், சுலோச்சனா மற்றும் பத்மா ஆகியோர் மாநிலத் தலைவர் வெ.மகேந்திரகுமார் ஆகியோர் அலுவலக முகப்பில் இருந்து வரவேற்று அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர், பொன்னாடை அணிவித்து எலுமிச்சை பழம் மற்றும் ஆப்பிள் வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முப்பெரும் விழாவில் மலர் வழங்கி நினைவுப் பரிசு பேக் கொடுத்து சங்கத்தின் 2026ம் ஆண்டிற்கான டைரியை வழங்கினார்கள். இந்நிகழ்வில் மாநிலத் தலைவருடன் தருமபுரி மாவட்ட தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்டத் தலைவர் கே.ஆர்.குமார், துணைத் தலைவர் கே.குணசேகரன், தமிழ்நாடு சமூக நீதி விடுதிப் பணியாளர்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் மற்றும் தருமபுரி மாவட்ட தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஆ.நஞ்சையன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பின்னர் அனைவருக்கும் இனிப்பு மற்றும் காரம் வழங்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவர், தமிழ்நாட்டிலேயே சிறப்புடன் செயல்படுவதாகவும் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவதாகவும், நிர்வாகிகள் அனைவருக்கும் தமது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
பின்னர், அலுவலகப் பதிவேட்டில் சங்கத்தின் சிறப்பான செயல்பாடுகளை பாராட்டி கையொப்பமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் நூலகம், கணிப்பொறி அறை, மேல் மாடிக் கூட்டரங்கம் மற்றும் டைனிங் ஹால் ஆகியவற்றை பார்வையிட்டார்.
அனைத்தையும் பார்வையிட்ட பின்னர் கண்டிப்பாக அடுத்த முறை தருமபுரி மாவட்டத்திற்கு வரும் போது தங்களின் கூட்டத்தில் கலந்துகொள்வதாக உறுதி அளித்து அனைவருடனும் கை குலுக்கி மனநிறைவுடன் பிரியா விடை அளித்து தமது பயணத்தை தொடர்ந்தார்.
இதற்கான ஏற்பாடுகளை மாநில மத்திய செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் மற்றும் மேனாள் மாவட்டத் தலைவர், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தருமபுரி மாவட்டம் என். மணி செய்திருந்தார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.