தலைமறைவாக இருந்த தீவிரவாதி கா்நாடகாவில் கைது…..

ஆந்திர மாநிலம் நந்தியால் பகுதியை சேர்ந்தவர் முகமது யூனுஸ் (வயது 33). இவர் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.) அமைப்பை சேர்ந்தவர் ஆவார். இவர் வாலிபர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்து வந்துள்ளாா். மேலும் அவர்களுக்கு ரகசிய ஆயுத பயிற்சியும் அளித்து வந்துள்ளார். தெலுங்கானாவில் பி.எப்.ஐ. அமைப்பினர் மற்றும் வாலிபர்களை பயங்கரவாத அமைப்பில் சேர்த்து அவர்களுக்கு பயிற்சி அளித்து வந்துள்ளார். இதுபற்றி அறிந்ததும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதனை அறிந்ததும் முகமது யூனுஸ் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.

இந்த நிலையில் பயங்கரவாதி முகமது யூனுஸ், கர்நாடக மாநிலம் பல்லாரி டவுன் கவுல் பஜார் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் பல்லாரிக்கு விரைந்து வந்து முகமது யூனுசை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். விசாரணையில், அவர் தனது அடையாளத்தை மறைத்து கடந்த 4 மாதங்களாக பல்லாரியில் பஷீர் என்ற பெயரில் பிளம்பராக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. அவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்ற வலுதூக்கும் வீரர் ஜாண்டு குமாருக்கு மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா பாராட்டு

ஸ்காட்லாந்து கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்

தமிழகச் சட்டப்பேரவையில் வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான தனி வேளாண் நிதிநிலை அறிக்கை

தமிழகச் சட்டப்பேரவையில் வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான தனி வேளாண்

ரயில் பயணத்தின் போது செய்யக்கூடாத ஆபத்தான காரியத்தில் ஈடுபட்ட பயணி ஒருவரின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ரயில் போது செய்யக்கூடாத ஆபத்தான காரியத்தில் ஈடுபட்ட பயணி ஒருவரின் செயல் சமூக