16. பிறர் செய்த தீமைகளைப் பொறுத்துக்கொள்ளுதல்
—————————————-
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பார்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.(குறள்: 155)
விளக்கம்:
பிறர் செய்த தீங்கைப் பொறுக்காமல் அவனைத் தண்டித்தவரை
அறிவுடையோர் ஒரு பொருட்டாக மதிக்க மாட்டார். ஆனால் தண்டிக்காமல்
பொறுத்துக் கொண்டவரையோ அறிவுடையோர் பொன்போல் போற்றி
வைத்துக்கொள்வர்.






