20. பயனில சொல்லாமை
பயனில்லாத வீண் சொற்களை சொல்லாதிருத்தல்
===============================================
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல் (குறள் 198)
விளக்கம்
அரிய பயன்களை ஆராய வல்ல அறிவுடையார் மிகுந்த பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.






