அரசு துறை செயலர்கள் உட்பட 18 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

சென்னை:
தமிழகத்தில் அரசுத் துறை செயலர்கள், மாநகராட்சி ஆணையர்கள், சார் ஆட்சியர்கள் உட்பட 18 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில், உணவு, கூட்டுறவு துறை செயலர் டி.ஜெகந்நாதன், வணிகவரி துறை ஆணையராகவும், வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் அபூர்வா, வேளாண் துறை செயலராகவும், அப்பதவியில் இருந்த சமயமூர்த்தி, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நிர்வாக சீர்திருத்த துறை ஆணையர் கே.கோபால், உணவு, கூட்டுறவு துறை செயலராகவும், சிறப்பு முயற்சிகள் துறை செயலர் ரமேஷ் சந்த் மீனா, திட்டம் மற்றும் வளர்ச்சி துறை செயலராகவும், தமிழ்நாடு கைவினை பொருட்கள் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநர் வி.ஷோபனா, எழுதுபொருள், அச்சக துறை ஆணையராகவும், சிஎம்டிஏ தலைமை செயல் அதிகாரி கவிதா ராமு, தமிழ்நாடு கைவினை பொருட்கள் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல, ஆவடி மாநகராட்சி ஆணையர் கே.தர்பகராஜ், உயர்கல்வி துறை துணை செயலராகவும், சென்னை மாநகராட்சி மத்திய மண்டல துணை ஆணையர் எஸ்.ஷேக் அப்துல் ரகுமான், ஆவடி மாநகராட்சி ஆணையராகவும், மதுரை மாநகராட்சி ஆணையர் கே.ஜெ.பிரவீன்குமார், சென்னை மாநகராட்சி மத்திய மண்டல துணை ஆணையராகவும், கடலூர் கூடுதல் ஆட்சியர் எல்.மதுபாலன், மதுரை மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் வி.சிவகிருஷ்ண மூர்த்தி, ஈரோடு மாநகராட்சி ஆணையராகவும், சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையர் எம்.சிவகுரு பிரபாகரன், கோவை மாநகராட்சி ஆணையராகவும், தூத்துக்குடி கூடுதல் ஆட்சியர் தாக்கரே சுபம் தியான்டியோராவ், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராகவும், திண்டிவனம் சார் ஆட்சியர் கட்டா ரவி தேஜா, சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாநகராட்சி ஆணையராக இருந்த எம்.பிரதாப், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண் இயக்குநர் மற்றும் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி திட்டங்களுக்கான இயக்குநராகவும், பொள்ளாச்சி சார் ஆட்சியர் எஸ்.பிரியங்கா, தஞ்சாவூர் கூடுதல் ஆட்சியராகவும், ஓசூர் சார் ஆட்சியர் ஆர்.சரண்யா, கடலூர் கூடுதல் ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65