21. தீவினையச்சம்
தீய செயல்களுக்கு அஞ்சி அவற்றைச் செய்யாதிருத்தல்
========================
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்மை அடல்வேண்டா தான்.
விளக்கம்
தீவினை தன்மைச் சேர்ந்து வருத்துவதை விரும்பாதவன் தான் பிறருக்குத் தீவினை செய்யாதிருக்க வேண்டும்.






