1. அறத்துப்பால் : 2. இல்லறவியல் : 9. விருந்தோம்பல்
வித்து இடல்வேண்டும் கொல்லோ விருந்துஓம்பி
மிச்சில் மிசைவான் புலம். (குறள் : 85)
விருந்தினரை முதலில் உண்ணச் செய்து மீந்திருப்பதைத் தான் உண்ணும் இயல்புள்ளவன் அறிவுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய நல்லறிவும் உளதோ? இல்லை.







