திருவள்ளூர் மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள டெங்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை மையத்திற்கு இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் த.பிரபுசங்கர் முன்னிலையில் அம்மையத்தில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். உடன் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜெ.ரேவதி, துணை முதல்வர் திலகவதி, இணை இயக்குநர் (சுகாதாரம்) சேகர், துணை இயக்குநர்கள் (சுகாதாரப் பணிகள்).ஜவஹர்லால், செந்தில்குமார், நிலைய மருத்துவ அலுவலர் கே.என்.ராஜ்குமார், முதுநிலை குடிமை மருத்துவர் விஜயராஜ், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்





