தூத்துக்குடி பனிமயமாதா பேராலய தங்கத்தேரோட்டம்:- பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற தூய பனிமயமாதா பேராலயத்தின் 441-ம் ஆண்டு திருவிழா மற்றும் 16-வது தங்கத்தேர் திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முதல் நாள் காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், 5.45 மணிக்கு 2-ம் திருப்பலியும், 7 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்று பேராலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் அன்னையின் திருக்கொடி ஏற்றப்பட்டது. மதியம் 12 மணிக்கு அன்னைக்கு பொன் மகுடம் அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தங்கத்தேர் பவனி இன்று நடைபெற்றது.
விழாவையொட்டி நேற்று மாலை பெருவிழா மாலை ஆராதனையும், இரவில் பேராலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனியும் நடைபெற்றது. இன்று அதிகாலை 4.30 மணிக்கு பங்கு தந்தை குமார்ராஜா நடத்திய முதல் திருப்பலி, 5.15 மணிக்கு பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் பெருவிழா கூட்டுத் திருப்பலியும், காலை 7 மணிக்கு தங்கத்தேர் சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. தங்கதேர் திருப்பலியை கோவா உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் பிலிப் நேரி நடத்தினர். அதுபோல் தங்கத்தேர் பவனியை கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ், இலங்கை மன்னார் பிஷப் இம்மானுவேல் பர்னான்டோ ஆகியோர் ஜெபம் செய்து தொடங்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து முக்கிய வீதிகளில் அன்னையின் தங்கத் தேர் பவனி நடைபெற்றது. மதியம் 12.30 மணிக்கு தங்கத் தேர் நன்றி திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு 82-வது நிகழ்ச்சியாக பெருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது. இந்த விழாவில் இந்தியா முழுவதும் இருந்து மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தம் என பல்லாயிரக்கணக்கானோர் மக்கள் பங்கேற்று உள்ளனர். விழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.
தூய பனிமயமாதா பேராலயத்தின் தங்கத்ரோரோட்ட திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி பனிமய மாதா பேராலய தங்கத்தேர் பவனியை முன்னிட்டு நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவேஷ் குமார் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோர் தலைமையில் தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியிறக்க விழா, நன்றி அறிவித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவில் அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கமிஷனர் தினேஷ்குமார், உள்பட இறைமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்