நகர்ப்புர நலவாழ்வு மையத்தினை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-117க்குட்பட்ட விஜயராகவா சாலையில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புர நலவாழ்வு மையத்தினை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (04.06.2023) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது :

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் உலகதரமான மருத்துவ சேவைகளை தேசிய சுகாதார இயக்ககம் மூலம் கிராமப் பகுதிகளில் இயங்கும் துணை சுகாதார நிலையங்களை கிராமப்புற ஆரோக்கிய நல மையங்களாகவும், அதன் உள்கட்டமைப்பு வசதி, மனித வளம் மற்றும் பொதுமக்களால் எளிதில் அவசரத் தேவைகளுக்கு அணுக இயலாத நிலையில் உள்ள மக்களுக்கு தாய்சேய் நலம் எளிதில் அடைய சிறப்பு கவனம் செலுத்தி புதுமையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

அதனடிப்படையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் தரமான மருத்துவ சேவையை வழங்கிடும் வகையில் தமிழ்நாடு சட்டசபையின் 2022-2023-ல் 07.05.2022 அன்று சட்டசபை அறிவிப்பு எண்-110ன்படி 708 நகர்ப்புர நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார்கள்.

தமிழ்நாடு சட்டசபையின் அறிவிப்பின்படி, நகர்ப்புரங்களில் சுகாதாரத்திற்கான நகர்ப்புர நலவாழ்வு மையங்கள் தேசிய நகர்ப்புர சுகாதாரக் குழுமத்தின் மூலம் கட்டப்பட்டு நகர்ப்புர மக்களின் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. இதற்கான அரசாணை (அ.எண்.365, மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு (EAP II-1) துறை, நாள்:14.10.2022) மற்றும் அரசாணை (அ.எண்.436, மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு (EAPII-1) துறை, நாள் 27.12.2022) வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், நகர்ப்புர நலவாழ்வு மையங்கள் 2021-2022ம் ஆண்டில் 593 மையங்கள், 2022-23 ஆண்டில் 115 மையங்கள் என மொத்தம் 708 நகர்ப்புர நலவாழ்வு மையங்கள் அனுமதிக்கப்பட்டு அவைகளின் கட்டிட வசதி, மனிதவளம் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவற்றில், முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் 140, கோவை மாநகராட்சியில் 50, மதுரை மாநகராட்சியில் 46, திருச்சி மாநகராட்சியில் 25, சேலம் மாநகராட்சியில் 25, திருப்பூர் மாநகராட்சியில் 25 மற்றும் நகராட்சி பகுதிகளில் 189 நகர்ப்புர நலவாழ்வு மையங்கள் என மொத்தம் 500 நகர்ப்புர நலவாழ்வு மையங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 06.06.2023 அன்று மாலை 5 மணிக்கு திறந்து வைக்கப்பட உள்ளது.

தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-117க்குட்பட்ட விஜயராகவா சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நகர்ப்புர நலவாழ்வு மையத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 06.06.2023 அன்று நேரடியாக திறந்து வைக்கிறார்.  மீதமுள்ள 499  நகர்ப்புர நலவாழ்வு மையங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்கள்.

முதற்கட்டமாக செயல்படுத்தப்படும் நகர்ப்புர நலவாழ்வு மையங்களில் ஒரு மருத்துவர். ஒரு செவிலியர். ஒரு சுகாதார ஆய்வாளர் மற்றும் ஒரு துணை பணியாளர் வீதம் ஒவ்வொரு நகர்ப்புர நலவாழ்வு மையத்திலும் பணிபுரிய மாவட்ட சுகாதார சங்கங்களின் மூலம் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள். மேலும், நகர்ப்புர நலவாழ்வு மையங்கள் காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், பிற்பகல் 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையிலும் செயல்படும்.

இந்த நகர்ப்புர நலவாழ்வு மையங்களில் கர்ப்பிணி தாய்மார்களின் பராமரிப்பு, குழந்தைகளுக்கான நோய்தடுப்பூசி மருந்துகள் மற்றும் அனைத்து வயதினருக்கும் ஏற்படும் எளிய வகை தொற்று நோய்களான சளி மற்றும் இருமல் உட்பட பேறுசார் மற்றும் மகப்பேறு பச்சிளங்குழந்தை, பச்சிளம் குழந்தை பராமரிப்பு சேவைகள், குழந்தை நலம் மற்றும் வளரிளம் பருவத்தினர் நலம், குடும்பக்கட்டுப்பாடு, கருத்தடை மற்றும் இனப்பெருக்க குழந்தை நலச் சேவைகள் (Reproductive Child Health), தொற்று நோய்த்தடுப்பு, புறநோயாளிகளுக்கான எளிய மற்றும் சிறிய நோய்களுக்கான தடுப்பு, தொற்றாநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை, மனநலம் பாதிப்பு கண்டறிதல் மற்றும் சிகிச்சை, கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பராமரிப்பு, பல் பராமரிப்பு, முதியோர்களுக்கான நோய்த்தடுப்பு சுகாதார சேவைகள், அவசர முதலுதவி சிகிச்சை விபத்து மற்றும் அவசரகால சேவை உள்ளிட்ட 12 வகையான அத்தியாவசிய மருத்துவ சேவைகள் நகர்ப்புர நலவாழ்வு மையங்களில் வழங்கப்பட உள்ளது.

மேற்கண்ட அத்தியாவசிய மருத்துவ சேவைகளை சார்ந்த 63 வகையான பரிசோதனைகள் நகர்ப்புர நலவாழ்வு மையங்களில் மேற்கொள்ளப்படும் இந்த நகர்ப்புர நலவாழ்வு மையங்களில் விரிவாக்கப்பட்ட மருத்துவ சேவைகளான வாய், காது மூக்கு தொண்டை, கண், முதியோர் நலம். மனநலம் மற்றும் சிறுகாய சிகிச்சைகள் ஆகியவை வழங்கப்படும். தொற்றா நோய்களான நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோய்களுக்கான உரிய மருந்துகளுடன் இணைந்து 171 வகையான மருந்துகள் வழங்கப்படுகின்றன .

நகர்ப்புர நலவாழ்வு மையம் சார்ந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளில் உள்ள பள்ளி சுகாதாரக் குழுவினருடன் இணைந்து தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.  மேலும், மையம் சார்ந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கும் சுகாதார கல்வி மற்றும் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும். நகர்ப்புர நலவாழ்வு மையங்களில் 14 வகையான ஆய்வகப் பரிசோதனைகள் மேற்கொள்ள தேவையான 32 வகையான மருத்துவக் கருவிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், நோயாளிகள் மருத்துவர்களை காணொலி வாயிலாக தொடர்பு கொண்டும் சிகிச்சை பெறலாம்.  மேலும், இ-சஞ்சீவினி இணைய முகப்பின் மூலமாக மருத்துவர் காணொலி வாயிலாக நோயாளிகளின் மேல்சிகிச்சைக்காக மற்றொரு முதுநிலை மருத்துவரின் ஆலோசனையை பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் அனைத்து நலவாழ்வு மையங்களிலும் செயல்படுத்தப்படும்.

இந்த ஆய்வின்போது, மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார் அவர்கள், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ந.எழிலன் அவர்கள், கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சுகாதாரச் செயலாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள், தேசிய நலவாழ்வு குழுமத் திட்ட இயக்குநர் திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ், இ.ஆ.ப., அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

நகர்ப்புர நலவாழ்வு மையத்தினை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்