நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டலம், தனித்த வசதிகள் மற்றும் சந்தை இணைப்புகள் மூலம் புவிசார் குறியீட்டு சூழலமைப்பை வலுப்படுத்துகிறது

2025-26 நிதியாண்டில், வேளாண்மை, கைவினைப்பொருட்கள், உணவுப் பொருட்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் தமிழ்நாட்டின் 5 பாரம்பரியப் பொருட்கள் புவிசார் குறியீட்டுப் பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இப்பொருட்களின் சட்டப்பூர்வ உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, அவற்றின் சந்தைப்படுத்தல் திறனும் மேம்படுத்தப்பட்டுள்ளது. அவை: கைவினைப்பொருட்கள் பிரிவின் கீழ் அம்பாசமுத்திரம் சொப்பு சாமான் (மர பொம்மைகள்), உறையூர் பருத்திச் சேலை, நாமக்கல் மாக்கல் பாத்திரங்கள்; வேளாண்மைப் பிரிவின் கீழ் தூயமல்லி அரிசி; உணவுப் பொருட்கள் பிரிவின் கீழ் கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரை. இந்தப் புவிசார்க் குறியீட்டு முத்திரையானது, அதன் நம்பகத்தன்மைக்கான ஓர் முத்திரையாகச் செயல்பட்டு, உற்பத்தியாளர்கள், நுகர்வோர் என இருவருக்கும் பொருளாதார மற்றும் கலாச்சார ரீதியான நன்மைகளை வழங்கும்.நபார்டு, பல்வேறு முகமைகளுடன் இணைந்து, பலதரப்பட்ட பொருட்களைக் கண்டறிந்து புவிசார் குறியீட்டுப் பதிவேட்டில் சேர்ப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறது. இதன்மூலம், தமிழ்நாட்டில் புவிசார் குறியீட்டுடன் இணைந்த மதிப்புத்  தொடர்களின் நிலைத்தன்மையையும், உற்பத்தியாளர்களுக்குச் சிறந்த விலை கிடைப்பதையும் உறுதி செய்கிறது.புவிசார் குறியீடு  முத்திரையிடப்பட்ட பொருட்கள், அவற்றின் நம்பகத்தன்மையையும் தனித்துவமான பிராந்திய அடையாளத்தையும் உணர்த்துவதோடு, பாரம்பரிய அறிவைப் பாதுகாப்பதோடு, நுகர்வோருக்குத் தரம் மற்றும் உற்பத்தியின் மூலத்தையும் உறுதி செய்கின்றன. தமிழ்நாட்டில், மதுரை மல்லி, மதுரை மரக்கொழுந்து , பண்ருட்டி பலாப்பழம் மற்றும் புளியங்குடி எலுமிச்சை போன்ற பொருட்கள், மாநிலத்தின் வளமான புவியியல் குறியீட்டுச் சூழலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். புவியியல் குறியீட்டுப் பதிவு, உயர் விலை நிர்ணயம் செய்ய உதவுவதன் மூலமும், போலிகளைத் தடுப்பதன் மூலமும், சந்தை நம்பிக்கையையும் போட்டித்தன்மையையும் வலுப்படுத்துவதன் மூலமும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கிறது.வேளாண்மை, உணவுப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் போன்ற துறைகளை உள்ளடக்கிய, புவிசார் குறியீடு சான்றளிக்கப்பட்ட பொருட்களின் அடிப்படையில், தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகும். மாநிலத்தில் புகழ்பெற்ற ஊத்துக்குளி வெண்ணெய், கொல்லிமலை மிளகு, ராமநாதபுரம் பூங்கார் அரிசி, காஞ்சிபுரம் இட்லி, கருங்காணி பருத்தி, கோவில்பட்டி சீவல், ஆத்தூர் பூவன் வாழைப்பழம், தூத்துக்குடி உப்பு, வில்லிசேரி எலுமிச்சை, வடக்காடு பலாப்பழம் உள்ளிட்ட புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் வலுவான தொடர் உற்பத்தியை எளிதாக்கியுள்ளது.இந்த முயற்சிகள், கிராமப்புறப் பொருளாதார மாற்றத்திற்கும், தமிழ்நாட்டின் தனித்துவமான தயாரிப்புகளை தேசிய அளவிலும் உலக அளவிலும் பிரபலப்படுத்துவதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முன்னெடுப்பு, இதர மாநிலங்களில் புவிசார் குறியீட்டை ஊக்குவிப்பதற்கான பின்பற்றத்தக்க ஒரு முன்மாதிரியாகச் செயல்படுவதோடு, கிராமப்புற வளர்ச்சி, பண்பாட்டுப் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள், கைவினைஞர்களின் வருவாய் மேம்பாட்டிற்கும் கணிசமாகப் பங்களிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.