“நவீன சமூகத்தில் கத்தோலிக்கக் கிறிஸ்தவக் குருத்துவம் மக்களுக்கு நெருக்கமாக இருக்கவேண்டும்.”
⚫🔵🔴
“இது அதிகாரப் பணியாக இல்லாமல், சேவை–சகோதரத்துவப் பணியாக மாறவேண்டிய காலம் இது.”
⚫
நவீன சமூகத்தின் சவால்கள்
தொழில்நுட்பம், தனிமை, பணமதிப்பு, குடும்பப் பிளவு, சமூக அநீதி, மற்றும் மன ஆரோக்கியக் குழப்பம் போன்றவை இன்றைய சமூகத்தை ஆழமாகப் பாதிக்கின்றன.
சமத்துவம், சுயமரியாதை, சுயசிந்தனை அதிகமாக வலியுறுத்தப்படும் காலம். யாரும் யாருக்கும் மேலும் இல்லை. கீழும் இல்லை.
⚫
“குருக்கள் மன்னர்கள் அல்லர். ஜமீன்கள் அல்லர். பண்ணையார்கள் அல்லர். அதிகாரம் காட்டி மக்களை அடக்கி வைப்போரும் அல்லர்.”
⚫
“குருத்துவம் என்பது அதிகாரம் அல்ல. மக்கள்பணி. இயேசுவின் வார்த்தையான “உன்னைப்போல் உன் அயலானையும் நேசி” என்பதை வாழ்க்கையாக வெளிப்படுத்தும் பொறுப்பான பணி என்று கத்தோலிக்கத் திருச்சபை வலியுறுத்துகிறது.”
⚫
“மக்கள்–மையக் குருத்துவம் இன்றையக் காலத்தின் தேவை. அது ஏழைகள், நோயாளி, தனிமைத்துயரில் ஆழ்ந்தோர், , ஒடுக்கப்பட்டவர், சமூகத்தின் விளிம்பில் உள்ளவர் எல்லாருக்கும் உண்மையாக இருத்தலை வேண்டுகிறது.”
⚫
மக்களின் வாழ்வியல் சிக்கல்களைக் காது கொடுத்துக் கேட்டல், தவறுகளுக்கு மனந் திறந்து மன்னிப்புக் கேட்பது, தேம்பி அழுவோருக்கு ஆறுதல், நீதிக்கான குரல் என்ற அடிப்படையில் இடையறாது வேலை செய்யும் பணிக் குருத்துவமே மக்கள் மையக் குருத்துவம் ஆகும்.
சவால்களை எதிர்கொள்ளும்
குருக்கள் தனிமைப்படுகிறார்கள். எனினும் இவர்கள் வறுமை, பசி, உடல் நலம், அநீதிகள் நீங்கப் போராடுகின்றனர். பொருளாதார ஏற்றத்தாழ்வு போன்ற சமூகச் சிக்கல்களுக்கு அமைதியாக இருக்காமல் திருசச்சபையின் சமூகக் கோட்பாட்டின்படி நீதியும் சகோதரத்துவமும் சமத்துவமும் தேவை என்று குரல் கொடுக்கின்றனர்.
நவீன ஊடகங்கள், வலையமைப்புகள், சமூகவியல் மாற்றங்கள் அனைத்தையும் புரிந்துகொண்டு, எளிமையான மொழியில், மனிதர்களைச் சென்றடைய வேண்டும். இறுதியாக இறைவனை வெளிப்படுத்தும் தூதுவராக குருக்கள் இருக்க வேண்டும்.
⚫
“மக்கள் சார்ந்த குரு மக்களைப் “பக்குவப்படுத்துபவர்” அல்லர். “கேட்டு, நின்று, பகிரும் நண்பர்” என்ற மனநிலையில் வாழ்பவரே குரு.”
⚫
“சபைவாழ்க்கையை மட்டுமே கவனிக்காமல், சமூக நீதி, சுகாதாரம், கல்வி, இளைஞர் வாழ்க்கை, திருமணச் சிக்கல்கள், திருமணம் முறிவு போன்ற யதார்த்த சிக்கல்களில் பகிர்ந்து நிற்கும் சேவையாளராக மாறுகிறார்.”
⚫
சுருக்கமாக
நவீன சமூகத்தின் சவால்களை முகாமையாகக் கொண்ட மக்கள் குருத்துவம் மக்களின் துன்பங்களுக்கு அருகில் நிற்கும் சேவையையும் சகோதரத்துவப் பார்வையையும் கொண்டிருக்க வேண்டும் என்று கத்தோலிக்கத் திருச்சபை அண்மைக்காலத்தில் வலியுறுத்த்துகிறது.
⚫
“குருத்துவிடுதல் என்பது மாற்றங்களைக் குறிக்கும்.” மக்களுக்கான மாற்றங்களைக் கொணர்வதே குருத்துவம். அது யாரிடம் வெளிப்பட்டாலும் போற்றுதலுக்குரியது. பின்பற்றத்தக்கது.
- பிலிப் சுதாகர்.
முகநூல் பதிவு.
31.03.2026.
⚫🔵🔴
“தோழர் அருட்பணி பிலிப் சுதாகர்” அவர்கள்
திண்டுக்கல் மறைமாவட்ட இளையோர் பணிக்குழுவின் இயக்குநர்.
“இவரின் குருத்துவ விழுமியங்களை விதைக்கும் மறையுறைகள் யாவும், சிறிதும் பழுதில்லாமல், பழுத்து பலன்களை பரவலாக்கக் கூடியது.”
“தனித்துவமானது.”
குருக்கள் துறவறத்தார் பொதுநிலையினர் என அனைவரையும் உண்மையான சமத்துவத்தை ஏற்று, இறையரசை நிறுவக் கூடிய வார்த்தைகள்.






