நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு யோகா ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பாக மாநில பொது செயலாளர் வே.காசிநாததுரை தலைமையில் நாமக்கல் மாவட்டம் கரூர் மாவட்டத்தில் உள்ள தற்காலிக அரசு பணி யோக ஆசிரியர்களும் மாவட்ட யோகா ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. டிசம்பர் மாதம் 16ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள மாநில மாநாட்டிற்கு தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை வைக்கும் வகையில் குடும்பத்துடன் மாநாட்டிற்கு அழைத்து வரவேண்டும். தமிழக அரசுகள் உடனடியாக அனைத்து துறைகளிலும் மருத்துவத்துறை கல்வித்துறை காவல்துறை விளையாட்டு துறை மற்றும் இதர துறைகளிலும் யோகா பயிற்சியாளர்களை நியமிக்க வேணடும். இந்த மாநாட்டிற்கு அமைச்சர்களைபும் அரசியல் தலைவர்களையும் மற்றும் உயர் அதிகாரிகளை அழைக்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாமக்கல் மாவட்டம் பொறுப்பாளர் மாதேஸ்வரன் அங்கமுத்து காந்தியவாதிரமேஷ் திருமதிமேனகா கரூர் மாவட்ட பொறுப்பாளர் மலர்கொடி செந்தில்நாதன் சேலம் மாவட்ட பொறுப்பாளர் விஜய் சிவலிங்கம், தமிழ்ச்செல்வி தமிழரசி சசிகலா கார்த்திகேயன் சுமித்ரா மற்றும் பலர் கூட்டத்தில் கலந்து சிறப்பித்தனர்.

வாக்குச்சாவடி மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆர்.கே. நகர் மற்றும் பெரம்பூர்





