நா.த.க. தலைவர் சீமான், திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் சுட்டுரைக் கணக்குகள் முடக்கப்பட்டது கருத்துரிமைக்கு எதிரானது!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கிவெங்கட்ராமன் கண்டனம்!

நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தமிழன் சீமான், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் நா.த.க. முதன்மை நிர்வாகிகள் பாக்கியராசன், இடும்பாவனம் கார்த்திக், சுனந்தா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோரின் சுட்டுரை (ட்விட்டர்) கணக்குகள் முடக்கப்பட்டதை எதிர்த்து தமிழ் தேசிய பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசின் முடிவுக்கு இணங்க இம்முடக்கத்தை ட்விட்டர் நிறுவனம் மேற் கொண்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. கருத்துகளைக் கருத்துகளால் எதிர்கொள்ள இயலாத ஆரியத்துவ பா.ச.க., தனது இந்திய ஆட்சி அதிகாரத்தின் வழியே தொடர்ந்து எதிர்கருத்தாளர்களை வேட்டையாடி வருவது நாம் அறிந்ததே. கர்நாடகத்தின் கௌரி லங்கேஷ், கல்புர்கி உள்ளிட்டோரை நேரடியாகக் கொன்றதில் தொடங்கி, எதிர்கருத்தாளர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்குவது வரை இச்செயல்பாட்டின் தொடர்ச்சியாகவே உள்ளது என அவர் கூறியுள்ளார். மேலும்,

குறிப்பாக தமிழ்நாட்டில், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும், தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய இனப்பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்தவர்களின் சுட்டுரைக் கணக்குகளை முடக்கி, தான் தமிழினத்தின் எதிரி என பா.ச.க. மீண்டுமொருமுறை தம்மை பறைசாற்றிக் கொண்டுள்ளது என்றும் கருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கும் இச்செயல்பாட்டை உடனடியாகக் கைவிட்டு, இக்கணக்குகளை மீண்டும் இயக்கிக் கொள்ள ட்விட்டர் நிறுவனம் அனுமதிக்க வேண்டும். கருத்துரிமையைக் காலில்போட்டு மிதிக்கும் இந்திய அரசின் செயலுக்கு இணங்கிப் போகக் கூடாது என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்