நிர்மலா சீத்தாராமன் தமிழகம் வருகை : பா.ஜ.கவை ஆதரித்து பிரச்சாரம்

நாடாளுமன்றத் தேர்தல்.பிரசாரத்துக்காக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தமிழகம் வருகிறார்.

வருகிற 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. நாளை, பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகம் வர உள்ளார்.

அவர் டெல்லியில் இருந்து நாளை காலை பெங்களூரு  சென்று அங்கிருந்து ஹெலிகாப்டரில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு வருகை தருகிறார்., கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் சி.நரசிம்மனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த பிறகு, ஹெிகாப்டரில் சிதம்பரத்துக்கு பயணம் மேற்கொள்கிறார்.

அங்கு அவர் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்கிறார். அதன் பிறகு, தஞ்சாவூர் பயணம் மேற்கொள்கிறார். அங்கு, தஞ்சாவூர் பா.ஜனதா வேட்பாளர் எம்.முருகானந்தத்துக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.

அடுத்த நாள் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரும், மத்திய இணை மந்திரியுமான எல். முருகனுக்கு ஆதரவு திட்டுகிறார்.  அன்றைய தினம் மாலை கோவை சென்று, அங்கு கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த பிறகு பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் கே.வசந்தராஜனுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ய உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்