நிலக்கரி சுரங்க டெண்டர் ரத்து… முதல்வருக்கும், தமிழகத்துக்கும் கிடைத்த வெற்றி: அமைச்ச்ர உதயநிதி ஸ்டாலின்

சென்னை:
நிலக்கரி சுரங்க டெண்டர் ரத்து முதலமைச்சருக்கும், தமிழகத்துக்கும் கிடைத்த வெற்றி என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசு சார்பில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு நிலக்கரி எடுக்க கூடுதல் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் தொடர்ந்து போராடி வந்தனர்.
இந்த நிலையில், தமிழக டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாலத் ஜோஷி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஏல பட்டியலில் இருந்து தமிழக பகுதிகள் நீக்கப்படுவதாக பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த முடிவு முதல் அமைச்சருக்கும், தமிழ்நாட்டுக்கும் கிடைத்த வெற்றி தனது ட்விட்டரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டு இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தனது டுவீட்டர் பதிவில், காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்ற மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உறுதியான நிலைப்பாட்டால் ஒன்றிய அரசு அத்திட்டத்தையே கைவிட்டுள்ளது. இது டெல்டாக்காரராக முதலமைச்சர் அவர்களுக்கும்-தமிழ்நாட்டுக்கும் கிடைத்த வெற்றி. விவசாயம்காப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட