நிலவுக்கு வெகு அருகே சென்று படம் பிடித்த சந்திரயான்-3

ஸ்ரீஹரிகோட்டா:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 என்ற விண்கலத்தை கடந்த மாதம் 14-ம் தேதி எல்.வி.எம்.-3-எம் -4 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது. முதலில் புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட சந்திரயான் 3 பின்னர், பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சுற்றத் தொடங்கியது.
இந்த நீள்வட்ட சுற்றுப்பாதையை படிப்படியாக உயர்த்தி விண்கலம் நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்பட்டது. கடந்த 1-ம் தேதி புவி வட்டப்பாதையின் இறுதிச்சுற்றை வெற்றிகரமாக நிறைவு செய்த சந்திரயான் -3 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதை நோக்கிய பயணத்தை தொடங்கியது. கடந்த 5-ம் தேதி நிலவின் சுற்றுப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்தது.
நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சுற்றி வரும் சந்திரயான் 3 விண்கலம், அதிகபட்சம் 18 ஆயிரம் கிலோ மீட்டராகவும், குறைந்தபட்சம் 100 கிலோ மீட்டர் என்ற அளவிலும் நிலவு சுற்றுப்பாதையில் சுற்றி வருகிறது. இந்நிலையில், சந்திரயான் – 3 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதை உயரத்தை குறைக்கும் முதற்கட்டப்பணி நேற்று இரவு நடைபெற்று வெற்றிகரமாக முடிந்துள்ளது.
இதன் மூலம் சந்திரயான் – 3 விண்கலம் நிலவின் அருகே சென்றுள்ளது. அடுத்தகட்டமாக சுற்றுவட்டப்பாதை தூரத்தை குறைக்கும் பணி வரும் 9ம் தேதி மதியம் 1 மணி முதல் 2 மணி அளவில் நடைபெற உள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும், சந்திரயான் – 3 விண்கலம் நிலவின் அருகே சுற்றி வரும் வீடியோவையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
சந்திரயான் – 3 விண்கலத்தை வரும் 23ம் தேதி நிலவின் மேற்பரப்பில் சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறக்க இஸ்ரோ தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.