நீங்க 10, பிளஸ் 2 பாஸா? ரூ.81,000.. சம்பளத்தில் அரசு வேலை

டெல்லி: மத்திய அரசின் பல்வேறு துறை மற்றும் தீர்ப்பாயங்களில் காலியாக உள்ள 1,600 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எஸ்எஸ்சி எனும் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 10, பிளஸ் 2 முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதன் மூலம் அதிகபட்சமாக மாதம் ரூ.81 ஆயிரம் வரை சம்பளம்பெற முடியும்.

மத்திய அரசின் பல்வேறு துறைகள், தீர்ப்பாயங்கள் உள்பட வெவ்வேறு பிரிவுகளில் பணியாற்ற தேவையான ஆட்களை எஸ்எஸ்சி (Staff Selection Commission or SSC) எனும் பணியாளர் தேர்வு ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இந்த ஆணையம் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இதுதவிர சென்னை, பெங்களூர் உள்பட 7 இடங்களில் பிராந்திய அலுவலகங்கள் உள்ளன. அந்த வகையில் தற்போது பணியாளர் தேர்வு ஆணையம் சார்பில் ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வு மூலம் 1,600 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இந்த பணிகள் லோவர் டிவிஷன் கிளர்க்/ஜூனியர் உதவி செயலாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (கிரேடு ஏ) உள்ளிட்ட 3 பிரிவுகளில் நிரப்பப்பட உள்ளது. இதில் லோவர் டிவிஷன் கிளர்க்/ஜூனியர் உதவி செயலாளர் பணிக்கு மாதம் ரூ.190,00 முதல் ரூ.63,200 வரை சம்பளம் வழங்கப்படும். டேட்டோ என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு மாதம் ரூ.25,500 முதல் ரூ.9,300 வரையும், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (கிரேடு ஏ) பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.25,500 முதல் ரூ.81 ஆயிரம் வரையும் சம்பளம் வழங்கப்பட உள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 10 அல்லது 12ம் வகுப்பு மட்டுமே முடித்திருந்தால் போதும். விண்ணப்பம் செய்வோர் 18 முதல் 21 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்களின் வயது என்பது 01.08.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். இந்த பணிக்கு ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், பிடபிள்யூடி பிரிவினரக்கு 10 முதில் 15 வயது வரையும் தளர்வு உண்டு.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://ssc.nic.in இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்ய ஜூ/ன் மாதம் 8 ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் என்பது இல்லை.

இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் கம்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, திறனறி தேர்வு, டைப்பிங் தேர்வு, ஆவணங்கள் சரிபார்ப்பு உள்ளிட்டவற்றுக்கு பிறகு தேர்வு செய்யப்படுவார்கள் என பணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.