அண்மை செய்தி
பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ் 48 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பயனடைந்துள்ளன அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான பாலமாக ஊடகங்கள் செயல்படுகின்றன: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு எம் சிவகுரு பிரபாகரன் நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே அரசுத் தரப்பில் யாரும் ஆஜராகாததால் நீதிபதி அதிருப்தி திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் சென்னை சேத்துப்பட்டில் செயல்பட்டு வரும் எம்.சி.சி. பப்ளிக் பள்ளி தனது 10ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஒரே நிகழ்வில் 56 உலகச் சாதனைகளை நிகழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

பாரம்பரிய மருத்துவத்தின் பங்கை ஜி-20 அதிகரிக்கும்…

சுகாதாரம் குறித்த ஜி-20 விவாதத்தில் இந்திய அரசாங்கத்தின் முயற்சிகள் பாரம்பரிய மருத்துவத்தை முன்னணியில் கொண்டு வந்துள்ளன என்றும், சுகாதார சவால்களை நிவர்த்தி செய்வதில் பாரம்பரிய மருத்துவத்தின் பங்கை ஜி-20 அங்கீகரிக்கும் என்றும் புதுதில்லியில் நடைபெற்ற ஜி-20 ஈடுபாட்டுக் குழுக்களுடனான கலந்துரையாடலில், உறுப்பினர்கள் தங்களது உறுதியை வெளிப்படுத்தினர். இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் ஜி-20 ஷெர்பா அமிதாப் காந்த், ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்யா ராஜேஷ் கோடேச்சா, சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் லாவ் அகர்வால், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் அபய் தாக்கூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது உரையாற்றிய அமிதாப் காந்த் தனது உரையில், “அனைத்து குழுக்களுடனும் நன்கு ஒத்துழைத்ததற்காக ஆயுஷ் அமைச்சகத்தை நான் பாராட்டுகிறேன். முழுமையான ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை அடைவதில் ஆயுஷ் நடைமுறைகளின் முக்கியத்துவத்தை நாம் அதிகரிக்க வேண்டும்.

“பாரம்பரிய மருத்துவம்” மிகவும் முக்கியமானது. ஏனெனில் இது இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக ஆரோக்கியத்தின் ஆதாரமாக உள்ளது. மேலும் முழுமையான ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை அடைவதில் ஆயுஷ் நடைமுறைகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் கூறினார். பாரம்பரிய மருத்துவத்திற்கான ஒரு பிரத்யேக உலக சுகாதார மையத்தை (டபிள்யூ.எச்.ஓ ஜி.சி.டி.எம்) உலக சுகாதார நிறுவனம் இந்தியாவில் கொண்டு வந்துள்ளது என்றும், இந்த மையம் பாரம்பரிய மருத்துவத்தின் திறனைப் பயன்படுத்தும் என்றும் அவர் எடுத்துரைத்தார்.

லாவ் அகர்வால் தனது உரையில், “அனைத்து சுகாதார சவால்களையும் அணுகும் வகையில் ஒருங்கிணைந்த ஆரோக்கியம் அல்லது முழுமையான ஆரோக்கியம் என்ற கருத்தைப் பற்றி உலகம் பேசுகிறது. நாங்கள் ஜி-20 நாடுகளிடையே ஒன்றிணைந்து பணியாற்றி வருகிறோம். மேலும் சுகாதாரத் துறையில் பாரம்பரிய மருத்துவத்தின் பங்கை ஏற்றுக்கொள்வதில் அனைவருக்கும் தெளிவான பார்வை உள்ளது” என்றார்.

இந்நிகழ்ச்சியில், பாரம்பரிய மருத்துவத் துறையில் தங்கள் பரிந்துரைகள் மற்றும் ஆழமான கலந்துரையாடல்கள் மூலம் பங்களித்த பணிக்குழுக்களை வைத்யா ராஜேஷ் கோட்டேச்சார் தனிப்பட்ட முறையில் பாராட்டினார். இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்தின் கீழ், ஆயுஷ் அமைச்சகத்தின் பங்களிப்பை பகிர்ந்து கொள்வதே முக்கிய நோக்கம் என்றும், அது வெற்றிகரமாக அடையப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

ஆயுஷ் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ராகுல் சர்மா, ஜி-20 பணிக் குழுக்களுடன் பாரம்பரிய மருத்துவம் குறித்த உரையாடலை தீவிரமாக உருவாக்குவதில் ஆயுஷ் அமைச்சகத்தின் பங்கை எடுத்துரைத்தார். ஜி-20 உச்சிமாநாட்டிற்காக உலகின் முக்கிய தலைவர்கள் கூடும்போது, உலகளாவிய சமூக ஆரோக்கியத்தில் பாரம்பரிய மருத்துவம் வகிக்கக்கூடிய முக்கிய பங்கைப் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.

பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ் 48 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பயனடைந்துள்ளன

பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ், உள்ளூர் மின்விநியோக நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட

அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான பாலமாக ஊடகங்கள் செயல்படுகின்றன: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு எம் சிவகுரு பிரபாகரன்

‘போதைப்பழக்கம் இல்லாத தமிழ்நாடு’ என்ற இலக்கை அடைய பொதுமக்களிடையே விழிப்புணர்வு அவசியம்: ராமநாதபுரம்

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே அரசுத் தரப்பில் யாரும் ஆஜராகாததால் நீதிபதி அதிருப்தி

📍 நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு| நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே

சென்னை சேத்துப்பட்டில் செயல்பட்டு வரும் எம்.சி.சி. பப்ளிக் பள்ளி தனது 10ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஒரே நிகழ்வில் 56 உலகச் சாதனைகளை நிகழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது

131 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட எம்.சி.சி. அசோசியேஷனின் கீழ் இயங்கும் முன்னணி சிபிஎஸ்இ