பிரதமர் மோடி மீது தற்கொலை படை தாக்குதல் நடத்துவோம் : மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு

திருவனந்தபுரம்:
கேரளா வரும் பிரதமர் மோடி மீது தற்கொலை படை தாக்குதல் நடத்துவோம் என்று திருவனந்தபுரம் பாஜ மாநில தலைவருக்கு வந்த மிரட்டல் கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதைத்தொடர்ந்து பிரதமர் மோடிக்கு பாதுகாப்பை மேலும் அதிகரிக்க மத்திய மற்றும் கேரள உளவுத்துறை அறிவுறுத்தி உள்ளது.
பிரதமர் மோடி வரும் 24, 25 ஆகிய தேதிகளில் கேரளா வருகிறார். தொடர்ந்து கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதையடுத்து கேரளாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் பாஜக மாநில அலுவலகத்திற்கு ஒரு கடிதம் வந்தது. அதில், கேரளாவுக்கு வரும் பிரதமர் மோடி மீது தற்கொலை படை தாக்குதல் நடத்துவோம் என்று குறிப்பிடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அதில் மிரட்டல் விடுத்த அமைப்பின் பெயர், விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிகிறது. அந்த கடிதத்தை பாஜ தலைவர் சுரேந்திரன், கேரள டிஜிபி அனில்காந்திடம் ஒப்படைத்தார். இது தொடர்பாக ஒரு புகாரும் கொடுத்தார்.
உடனடியாக இதுகுறித்து ஒன்றிய மற்றும் மாநில உளவுத்துறை அமைப்புகள் விசாரணை நடத்தி ஒன்றிய உளவுத்துறைக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளன. அதில், பிஎப்ஐ அமைப்பு தடை செய்யப்பட்டதை தொடர்ந்து கேரளாவில் ஏற்பட்டுள்ள நிலை மற்றும் கேரளாவில் பல்வேறு தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகிறது.
இதன் காரணமாக பிரதமர் மோடிக்கு அச்சுறுத்தல் இருக்கும் என்று கருதப்படுவதால் அவருக்கு பாதுகாப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய உள்துறையிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் மிரட்டல் கடிதம் குறித்த விவரங்களும் இடம்பெற்று உள்ளன. இது தொடர்பாக கேரள டிஜிபி அனில்காந்த் போலீஸ் உயரதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.