புகார் மனு அளிக்கும் சமூக ஆர்வலர்களை மிரட்டி பணிய வைக்கும் விதமாக பொய்யான போலியாக புகார் அளித்து அச்சுறுத்தி வருகின்றவர்கள் சட்டரீதியாக நடவடிக்கை தேவை

அரசு இடத்தை மீட்டெடுக்கப்பட்டதால் சமூக ஆர்வலருக்கு தொடர் மிரட்டல்.புகாரை திரும்ப பெற கோரி சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணனை மிரட்டிய விவகாரம் மாநகர காவல் ஆணையரிடம் புகார்.அரசாங்க இடத்தை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளவர்கள் புகாரளித்த சமூக ஆர்வலருக்கு மிரட்டல்.காந்தி நகரிலுள்ள மாநகராட்சிக்குட்பட்ட இடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக அப்புறப்படுத்த நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த கொங்கு வியாபார சங்க சக்திவேல் சிலரை கும்பலாக சேர்த்து கொண்டு ஈ.பி.அ.சரவணனின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக போலியான பொய்யான தவறான தகவல்களை கூறி எவ்வித அடிப்படை ஆதாரமற்ற பொய் புகாரை அளித்தும் நான் அளித்த புகார் மனுவை திரு‌ம்ப பெற கூறி மிரட்டி வருவதாக மாநகர காவல் ஆணையரிடம் ஈ.பி.அ.சரவணன் புகார்.கடந்த வாரம் போயம்பாளையத்தில் ரூ.10.கோடி மதிப்புள்ள அரசாங்க இடத்தை மீட்டெடுக்கப்பட்டு அரசு சொந்தமானது என போர்டு வைக்கப்பட்டது.சமூக ஆர்வலர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை அதற்கு எடுத்துக்காட்டு, புதுக்கோட்டையில், சமூக ஆர்வலர் படுகொலை செய்யப்பட்டது.சமூகத்திலுள்ள அக்கரையுடன் புகார் மனு அளிக்கும் சமூக ஆர்வலர்களை மிரட்டி பணிய வைக்கும் விதமாக பொய்யான போலியாக புகார் அளித்து அச்சுறுத்தி வருகின்றவர்கள் சட்டரீதியாக நடவடிக்கை தேவை.இன்று அவிநாசி சாலை குமார் நகரிலுள்ள மாநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் மாநகர காவல் ஆணையளார் மதிப்புக்குரிய ராஜேந்திரன் ஐபிஎஸ் அவர்களிடம் தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்ற கூட்டமைப்பு சங்கத்தில் மாநில இணை பொதுச் செயலாளரும் சமூக ஆர்வலருமான ஈ.பி.அ.சரவணன் நேரிடையாக புகார் மனு அளித்தார்.அந்த புகார் மனுவில்..திருப்பூரில் நடைபெறுகின்ற தவறுகளை பொது நலத்தோடு தட்டி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டதால் என்னை பழி வாங்க திட்டம் தீட்டி எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி உண்மைக்கு புறம்பான தவறான தகவல்களை தெரிவித்து அடிப்படை ஆதாரமற்ற பொய் புகாரை அளித்தும் நான் அளித்த புகார் மனுவை திரு‌ம்ப பெற கூறி மிரட்டி வருகின்ற கொங்கு வியாபார சங்க சக்திவேல் உள்ளிட்டவர்கள் மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு வழக்கு பதிந்து எங்களை போல சமூக பணியாற்றும் சமூக ஆர்வலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் இதில் தொடர்புடைய நபர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை வேண்டும்.இந்த நிலையில் காந்தி நகரிலுள்ள மாநகராட்சிக்குட்பட்ட இடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக அப்புறப்படுத்த நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த கொங்கு வியாபார சங்க சக்திவேல் என்பவர் சிலரை கும்பலாக சேர்த்து கொண்டு ஈ.பி.அ.சரவணனின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக போலியான பொய்யான தவறான தகவல்களை கூறி எவ்வித அடிப்படை ஆதாரமற்ற பொய் புகாரை அளித்தும் நான் அளித்த புகார் மனுவை திரு‌ம்ப பெற கூறி மிரட்டி வருகின்றார்கொங்கு வியாபார சங்க சக்திவேல் உள்ளிட்டவர்கள் மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு வழக்கு பதிந்து எனக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் இதில் தொடர்புடைய நபர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.குறிப்பாக பொது நலத்தோடு மாநகராட்சிக்குட்பட்ட கால்வாய் சாலைகளை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக ஈ.பி.அ.சரவணனின் புகார் அளித்துள்ளார்.தோட்டத்துபாளையம் பகுதியிலுள்ள நெடுஞ்சாலை பொது இடத்திலுள்ள பழைய இரும்பு கடையில் 100 க்கும் மேற்பட்ட கேஸ் சிலிண்டர்கள், வயர்கள், பழைய குப்பை பொருட்களை எரிப்பதால் மக்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல் எற்படுவதோடு ஏதேனும் பெரும் தீ விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால் உடனடியாக மேற்படி பழைய இரும்பு கடையை அப்புறப்படுத்த வேண்டும்.PN.ரோடு போயம்பாளையம் பழனிச்சாமி நகரிலுள்ள (கல்லாங்குத்து) அரசுக்கு சொந்தமான ரூ.10கோடி மதிப்புள்ள நிலம் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை அகற்ற வேண்டுமென்ற என்னுடைய புகாரை ஏற்று ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை மீட்டெடுக்கப்பட்டது.இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சிக்கு அவிநாசி சாலையிலுள்ள 1 வது மண்டலம் 13-வது வார்டுக்குட்பட்ட காந்தி நகர் நால்ரோடு சிக்னலிருந்து – ஈபி காலனி செல்லும் 80 அடி சாலை கார்னரில் உள்ள பிராய்லர் கோழிக்கடை உள்ளிட்டவைகள் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து சாக்கடை கழிவுநீர் கலப்பு மற்றும் பிளாஸ்டிக் கழிவு கொட்டப்பட்டு மாசடைந்து பாழ்பட்டுள்ள சாக்கடை கால்வாயை மீட்டெடுக்க வேண்டுமென கடந்த 7 ம்தேதி முதல்வர் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், உள்ளிட்டோர்களுக்கு புகார் அளித்திருந்தேன் அதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர்கள் நேரிடையாக சம்பந்தப்பட்ட இடத்திலுள்ள ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்து உறுதிப்படுத்தி உடனடியாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை அகற்ற வேண்டுமென ஆக்கிரமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அறிவிப்பு கடிதம் அளித்து ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக அப்புறப்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்இது தொட‌ர்பாக ஈ.பி.அ.சரவணனுக்கு மேற்படி புகார் மனு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கடந்த 20-01-2025 ம் தேதி மாநகராட்சி நிர்வாகம் கடிதம் வாயிலாக தகவல் அனுப்பியுள்ளனர்.இதன் காரணமாக சட்டவிரோதமாக மாநகராட்சிக்குட்பட்ட காலவாய்கள், சாலைகளை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளவர்கள் சேர்ந்து வியாபார சங்க சக்திவேல் என்பவரிடம் ஏதோ சொல்லி அவர் ஈ.பி.அ.சரவணனுக்கு செல்போன் வாயிலாக தொடர்புக் கொண்டு எங்களுடைய சங்க சார்பாக அளிக்கப்பட்ட காந்தி நகரில் சட்டவிரோதமாக மாநகராட்சிக்குட்பட்ட காலவாய்கள், சாலைகளை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் மனுவை திரு‌ம்ப பெற வேண்டுமென அச்சுறுத்தி கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு அதனை தொடர்ந்து அடையாளம் தெரியாத வெவ்வேறான எண்களிலிருந்து என்னை தொடர்புகொண்டு அச்சுறுத்திய நிலையில் ஈ.பி.அ.சரவணன் எவ்வித அச்சுறுத்தலுக்கும் அடிபணியாத நிலையில் ஈ.பி.அ.சரவணனை பழிதீர்க்க வேண்டுமென்ற தீய எண்ணத்தில் இன்று ஈ.பி.அ.சரவணனின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டுமென்ற தீய எண்ணத்தில் தான் எவ்வித அடிப்படை ஆதாரமற்ற பொய்யான புகாரை காவல் நிலையத்தில் அளித்து மறைமுகமாக என்னை மிரட்டி அச்சுறுத்தி பொய்யான புகார்கள் மூலமாக தேவையில்லாத வீணான மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளர்.திருப்பூர் பகுதிகளிலுள்ள பொது மக்களுக்களுடைய குடிநீர், மின்சாரம், சாலை போக்குவரத்து போன்ற அத்தியாவசிய பிரச்சனைகள் தொடர்பாக சமூக ஆர்வலர்களாகிய ஈ.பி.அ.சரவணன் அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று தீர்வுகண்டு பொது மக்களுக்கு சேவை செய்வதால் உயிருக்கு உரிய பாதுகாப்பு இல்லை.சமுதாயத்தில் உள்ள நற்பெயரை களங்கப்படுத்தும் வகையிலும் நாங்கள் சார்ந்து இருக்கும் தொழிற்சங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்திலும் ஈ.பி.அ.சரவணனின் தொழிற்சங்கத்தை பற்றியும் தவறான போலியான பொய்யான தகவல்களை கூறி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் அப்பாவி பாமர நடுத்தர ஏழை கூலி தொழிலாளர்களை ஆசை வார்த்தைகளை கூறி கும்பலாக அழைத்து பொய் அளித்து சமூக ஆர்வலர்களை அச்சுறுத்தி வருகின்ற வியாபார சங்க சக்திவேல் உள்ளிட்டவர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே உடனடியாக இது தொட‌ர்பாக விசாரித்து மேற்படி சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு எவ்வித அடிப்படை ஆதாரங்கள் இன்றி வேண்டுமென்றே ஈ.பி.அ.சரவணனின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டுமென்ற தீய என்னத்தில் எனது பெயரை தவறாக பயன்படுத்தி பொய் புகார் அளித்து ஈ.பி.அ.சரவணனை சமூக பணிகளை முறையாக செய்ய முடியாத வகையில் அச்சுறுத்தி வருகின்ற கொங்கு வியாபார சங்க சக்திவேல் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுப்பதை உறுதிசெய்ய வேண்டுமென தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

புகார் மனு அளிக்கும் சமூக ஆர்வலர்களை மிரட்டி பணிய வைக்கும் விதமாக பொய்யான போலியாக புகார் அளித்து அச்சுறுத்தி வருகின்றவர்கள் சட்டரீதியாக நடவடிக்கை தேவை

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்