புதுவை முதல்வர் ரங்கசாமி முன்பு தீக்குளிக்க முயற்சி…

புதுவை கோர்க்காடை சேர்ந்த பெண் தவமணி(46).இவர் தனது அண்ணன் மாசிலாமணி மற்றும் குடும்பத்தினருடன் புதுவை சட்டசபைக்கு இன்று காலை வந்திருந்தார். முதல்-அமைச்சரை காண வேண்டும் எனக்கூறி சட்டசபை வளாகத்திற்குள் வந்து காத்திருந்தார். அப்போது சுமார் 12.15 மணியளவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபை வளாகத்துக்கு காரில் வந்தார். அவரை வரவேற்க அலுவலக ஊழியர்கள் காத்திருந்தனர். அப்போது காரிலிருந்து ரங்கசாமி இறங்கி நின்று, சட்டசபை படிக்கட்டுகளில் ஏற முயன்றார். இதைக்கண்ட தவமணி ஓடிச்சென்று முதல்-அமைச்சரின் காலை பிடித்துக்கொண்டார்

தனது பிரச்சினைக்கு முதலமைச்சர்தான் தீர்வு காண வேண்டும். கோர்க்காட்டில் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் நெல் பயிர் செய்திருந்தோம். தற்போது வக்கீல் ஒருவர் போலி பத்திரம் தயாரித்து நிலத்தை அபகரித்துகொண்டார். நெல்லையும் அறுவடை செய்துவிட்டார். இதுகுறித்து போலீசில் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி கதறியழுதார். அப்போது அருகிலிருந்த தவமணியின் அண்ணன் மாசிலாமணி மறைத்து வைத்திருந்த பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்தார். அப்போது பெட்ரோல் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் காலிலும் ஊற்றியது. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த முதலமைச்சரின் பாதுகாவலர்கள், சட்டசபை காவலர்கள் உடனடியாக அவர்கள் இருவரையும் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் இருந்து அகற்றினர்.

முதல்-அமைச்சர் ரங்கசாமி, இதுகுறித்து உரிய விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கும்படி கூறிவிட்டு அலுவலகத்துக்குள் சென்றார். இதையடுத்து சட்டசபை காவலர்கள் பெரியகடை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பெரியகடை போலீசார் அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி, பின்னர் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். சம்பவம் குறித்து வில்லியனூர் எஸ்பியிடம் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தி அவர்களை போலீஸ் வாகனத்தில் வில்லியனூருக்கு அனுப்பி வைத்தனர். புதுவை சட்டசபையில் பொதுமக்கள் எளிதாக வந்து செல்வது வாடிக்கை. இருப்பினும் பாட்டிலில் பெட்ரோல் எடுத்துவரும் வரை சட்டசபை காவலர்கள் அஜாக்கிரதையாக இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து துறைரீதியில் விசாரணை நடத்தவும் சட்டசபை செயலர் நடவடிக்கை எடுத்துள்ளார். இச்சம்பவத்தால் புதுவை சட்டசபையில் பெரும் பரபரப்பு நிலவியது. பெட்ரோல் துளிகள் பட்டதால் முதலமைச்சர் ரங்கசாமி தனது அலுவலகத்தில் சட்டையை மாற்றிக்கொண்டார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.