“பேப்பர் படிங்க…” முதல்வர் விஜய்… «ப்பர் படிச்சா மட்டும் பத்தாது… உதயநிதி

சென்னை:
பேரவையில் மேகதாது குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முதலமைச்சர் விஜய் பேசும்போது, “காவிரி விவகாரத்தில் அரசியல் செய்யும் எண்ணம் இந்த அரசுக்கு துளி அளவும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. மேகதாது விவகாரத்தில் நாம் அனைவரும் இணைந்துதான் தீர்மானம் நிறைவேற்றினோம், பிரதமருக்கும் அனுப்பினோம். நாடாளுமன்ற விவகாரத்தில் மத்திய அமைச்சர் முழு விவரங்களை கூறவில்லை என்பதால் மேகதாதுவுக்கு அனுமதி வழங்கக் கூடாது என அடுத்த நாளே பிரதமருக்கு கடிதம் எழுதினோம்” என்றார்.
மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டு உரிமையை அரசு சிறிதும் கூட விட்டுத்தராது என முதலமைச்சர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்தார். அதை சட்டப்படி அணுக உள்ளதாக விளக்கமளித்தார். மேலும் “காவிரி விவகாரத்தை கவனமாக கையாள வேண்டும். யாருக்கு பெருமை என பார்க்காமல் இது தமிழக மக்களின் பிரச்னை என அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சொன்னதை இப்போது சொல்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.
அதேபோல், “சட்டப்படி இவ்விவகாரத்தை அணுகுவதில் உறுதியாக உள்ளோம். பெங்களூர் போக முதலில் முடிவெடுத்தது நான்தான். கர்நாடக அணை குறித்து யோசித்தது நான் தான், பகை நாடுகளே பிரச்சனையை பேசி தீர்க்கப் பார்க்கிறோம்; பக்கத்து மாநிலத்திடம் பேசி பார்க்க நினைத்தோம். இந்த பிரச்னையை தீர்க்க நல்ல முடிவு கிடைக்கும் என்ற எண்ணத்தில்தான் நான் பெங்களூரு போக முடிவெடுத்தேன். அதனால் தான் அப்படி முயற்சி செய்தேன். அதில் அவமானம் நடந்தால் தமிழ்நாட்டு மக்களுக்காக அதையும் தாங்க தயாராக தான் இருக்கேன்” என்று அவர் தெரிவித்தார்.
ஒரு முயற்சி செய்து பார்க்கலாம் என எண்ணியதுதான் பெங்களூர் முயற்சி தொடங்கப்பட்டதாக கூறிய அவர், இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்குமே என எண்ணியது நான் தான் என்றும், பகை நாடுகளை பேசி தீர்க்கிறார்கள் பக்கத்து மாநிலத்தில் பேசி தீர்த்தால் என்ன என்று நினைத்ததாகவும் முதலமைச்சர் விஜய் கூறினார். காவிரி விவகாரம் பற்றி நீர்வளத்துறை அமைச்சர் உரிய விளக்கம் அளிப்பார் என்றும் அவர் பேசினார்.
தனது பேச்சின் இறுதியில் “குறுவை சாகுபடி நிவாரண தொகுப்பு பற்றி எதிர்க்கட்சிகள் கேட்டிருந்தாங்க. குறுவை சாகுபடி நிவாரண தொகுப்பு ஏற்கனவே கொடுத்தாச்சு. அரசியலே நாங்க தான் என சொல்பவர்களுக்கு இது எப்படி தெரியாம போனது. முன்ன பின்ன பேப்பர் படித்திருந்தால் நாட்டில் என்ன நடக்குது என்பது தெரிந்திருக்கும்..” என்று பேசினார்.

அதற்கு பதில் கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் “அரசு கொடுத்தது சிறப்பு தொகுப்பு. ஆனால் இப்போ விவசாயிகள் வறட்சி நிவாரண நிதி கேக்குறாங்க. இது ரெண்டுக்கும் வித்தியாசம் தெரிஞ்சுக்கோங்க. இதுக்கு டெய்லி காலை பேப்பர் படிச்சா மட்டும் பத்தாது. விவசாயிகளை, அனைத்து கட்சிகளை சந்திக்கணும். தமிழ்நாடு அரசு அனைத்து கட்சி கூட்டம் கூட்ட என்ன பயம்?” என்று பதிலடி கொடுத்தார். அதன் தொடர்ச்சியாக பேசிய அவை முன்னவர் செங்கோட்டையன், வறட்சி நிதி செப்டம்பர் மாதத்திற்கு பின் தான் கணக்கெடுக்கப்படும் என கூறினார்.

நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 என்ற வாக்குறுதி என்னவானது?: எடப்பாடி பழனிசாமி கேள்வி

சென்னை,தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அவர்

தொலைநோக்கு பார்வையுடன் கூடியது பொது, வேளாண் பட்ஜெட்:- முதல்வர் விஜய் பாராட்டு

சென்னை:தமிழக முதல்வர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டின் வளர்ச்சியை இலக்காகவும், மக்கள் நலனை

புதிய திட்டங்கள் எதுவும் இல்லை; வேளாண் பட்ஜெட் ஏமாற்றம்: பிரேமலதா விஜயகாந்த்

சென்னை:வேளாண் பட்ஜெட் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், விவசாயிகளை