பொதுமக்களை மிரட்டிவரும் அமைச்சரின் ஆதரவாளரான 10வது மண்டல குழு தலைவர்

சென்னை:
சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் திமுக பகுதி செயலாளராவார். இவர் 142வது வார்டு மாமன்ற உறுப்பினரும், மாநகராட்சியின் 10வது மண்டல குழு தலைவராகவும் உள்ளார். இவர் அமைச்சர் மா.சுப்பிரமணியின் அதிதீவிர விசுவாசி ஆவார்.
இந்த செல்வாக்கை பயன்படுத்தி, இவர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மக்கள் குறைகளை தெரிவிக்கும்போது மிரட்டும் தோணியில் பேசி வருகிறார். மக்கள் பணி செய்ய வேண்டிய இவர், மக்கள் விரோத போக்கை கடைப்பிடிப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்தநிலையில் அடையாறு ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தனியார் கல்லூரியை அப்புறப்படுத்தக் கோரி கார்த்திக் என்பவர் ஆன்லைன் மூலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைபற்றி அறிந்த 10வது மண்டலக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி கார்த்திக்கை அலுவலகத்திற்கு அழைத்து தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டி உள்ளார். மேலும் கார்த்தியின் வீட்டிற்கே சென்று அவரது பெற்றோரையும் மிரட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)