சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சி- சென்னைகோட்டை பகுதியில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

சென்னை:
சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,- சுதந்திர தின விழா வரும் 15-ம் தேதி சென்னை கோட்டையில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வரும் 4, 10 மற்றும் 13 ஆகிய 3 நாட்கள் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. எனவே இந்த 3 நாட்களும் காலை 6 மணிமுதல் ஒத்திகை முடியும் நேரம் வரை கோட்டை பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நேப்பியர் பாலம் முதல் போர் நினைவு சின்னம் வரை அமைய பெற்றுள்ள காமராஜர் சாலை, போர் நினைவு சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை அமைய பெற்றுள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமர சாலை ஆகிய சாலைகளில் அனைத்து வாகனங்களின் போக்குவரத்தும் தடை செய்யப்படும்.
காமராஜர் சாலையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை வந்து அடையலாம்.
பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வடக்கு கோட்டை பக்க சாலை ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, இவிஆர் சாலை, பல்லவன் சாலை, அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடையலாம்.
அண்ணா சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் வாலாஜா சிக்னல் சந்திப்பு, முத்துசாமி பாலம், ராஜா அண்ணாமலை மன்றம், என்எப்எஸ் சாலை வழியாக பாரிமுனையை சென்றடையலாம் என்று கூறப்பட்டுள்ளது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி