போக்சோ சட்டத்தில் திமுக கவுன்சிலர் கைது: அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கம்

கடலூர்:
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சி 30வது வார்டு கவுன்சிலராக திமுகவைச் சேர்ந்த பக்கிரிசாமி என்பவர் இருந்து வந்தார். இவர் வசிக்கும் பகுதியில், அவருக்கு சொந்தமான பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பயின்று வந்த ஆறு வயது சிறுமிக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து அவர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.
இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மேற்கு மாவட்டம், விருத்தாசலம் நகராட்சி 30வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பக்கிரிசாமி, கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், விருத்தாசலம் மகளிர் போலீசார் பக்கிரிசாமியை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள பக்கிரிசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்