போலி மருந்துகளுக்கு எதிராக மத்திய சுகாதார அமைச்சகம் விரைவான நடவடிக்கை எடுக்கிறது; கொல்கத்தாவில் மிகப்பெரிய அளவில் பறிமுதல்

போலி மருந்துகளின் சட்டவிரோத வர்த்தகத்திற்கு எதிரான ஒரு தீவிரமான நடவடிக்கையாக, கொல்கத்தாவில் உள்ள மொத்த விற்பனை வளாகத்தில், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சி.டி.எஸ்.சி.ஓ), கிழக்கு மண்டலம் மற்றும் மேற்கு வங்கத்தின் மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் ஆகியவற்றால் கூட்டு விசாரணை நடத்தப்பட்டது. கொல்கத்தாவில் உள்ள கேர் அண்ட் க்யூர் ஃபார் யூ நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில், போலி என சந்தேகிக்கப்படும் ஏராளமான புற்றுநோய் எதிர்ப்பு, நீரிழிவு எதிர்ப்பு மற்றும் பிற மருந்துகள் கைப்பற்றப்பட்டன.அயர்லாந்து, துருக்கி, அமெரிக்கா மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் எனப் பெயர் பொறிக்கப்பட்ட இந்த மருந்துகள், இந்தியாவில் சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்யப்பட்டதை நிரூபிக்கும் எந்த ஆதாரமும் இல்லை என்பது தெரிய வந்தது. அத்தகைய ஆவணங்கள் இல்லாத நிலையில், இந்த மருந்துகள் போலியானவை என்றே கருதப்படுகிறது. விசாரணைக் குழு பல வெற்று பேக்கிங் பொருட்களையும் கண்டுபிடித்தது. மேலும் கைப்பற்றப்பட்ட பொருட்களின் நம்பகத்தன்மை  குறித்தும் சந்தேகம் எழும்பியுள்ளது.கைப்பற்றப்பட்ட  மருந்துப் பொருட்களின் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ. 6.60 கோடி. முறையான விசாரணையை உறுதி செய்வதற்காக, மருந்துகளின் மாதிரிகள் தர பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள கைப்பற்றப்பட்ட மருந்துகள் சி.டி.எஸ்.சி.ஓ-ஆல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.விசாரணையின் விளைவாக, மொத்த விற்பனை நிறுவனத்தின் உரிமையாளராக அடையாளம் காணப்பட்ட ஒரு பெண், கிழக்கு மண்டலத்தின் சி.டி.எஸ்.சி.ஓ.வின் மருந்து ஆய்வாளரால் கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைத்து மேலும் விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதில் பொறுப்புடைமையுடன் உள்ளது.  கொல்கத்தாவில் நிகழ்ந்த இந்த  பறிமுதல் விசாரணை, போலி மற்றும் தரமற்ற மருந்துகளை சந்தையில் புழக்கத்தில்  விடுவதற்கு எதிரான அரசின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

போலி மருந்துகளுக்கு எதிராக மத்திய சுகாதார அமைச்சகம் விரைவான நடவடிக்கை எடுக்கிறது; கொல்கத்தாவில் மிகப்பெரிய அளவில் பறிமுதல்

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube