மதுரையை தாக்கும் வெப்பத்தீவு பாதிப்பு; ‘பசுமை மதுரை செயல் திட்டம்‘ தீட்ட நீதிமன்றத்தில் மனு

மதுரை:
மதுரையில் அதிக வெப்ப அபாயம் உள்ளதாக ஆக்ஸ்போர்டு ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.. இந்நிலையில், “பசுமை மதுரை செயல்திட்டம்” அமல்படுத்தக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விசாரித்தது. வைகை கரை ஆக்கிரமிப்பு அகற்றம், ரிங் ரோடு மரக்கன்றுகள் நடுதல் மற்றும் வெப்ப அலை தடுப்புத் திட்டம் தொடர்பாக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், உலகம் முழுவதும் பெருத்த கவனத்தை ஈர்த்துள்ளது. 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழும் 205 முக்கிய நகரங்களை ஆய்வு செய்ததில், அதிக வெப்ப அபாயத்தை எதிர்கொள்ளும் நகரங்களின் பட்டியலில் மதுரை உலக அளவில் 7வது இடத்தை பிடித்துள்ளது.
தென் தமிழகத்தின் முக்கிய மையமாக விளங்கும் மதுரை மாநகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த வெப்பநிலை உயர்வு, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதித்து வருகிறது. நகரமயமாக்கல், புதிய கட்டிடங்களின் வருகை, வைகை ஆற்றின் கரைகள் மற்றும் நகரை சுற்றியுள்ள முக்கிய சாலைகளின் விரிவாக்கம் போன்ற பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக பழமையான பெரிய பெரிய மரங்கள் அதிக அளவில் அகற்றப்பட்டுள்ளன. இதனால் மதுரையின் பசுமை பரப்பு குறைந்து வெப்ப தீவு எனப்படும் பாதிப்பு உருவாகியுள்ளது என்று குறிப்பிட்டிருந்தது.
இந்தநிலையில், மதுரை மானகிரி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் என்பவர், இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், “மதுரையின் பசுமைப் பரப்பை அதிகரிக்க “பசுமை மதுரை செயல்திட்டம்” என்ற ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் தலைமையில் பல்துறை அதிகாரிகளைக் கொண்ட பிரத்யேக பசுமைக் குழுவை அமைக்க வேண்டும். வைகை ஆற்றின் 2 பக்க கரைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, அங்கு பூர்வீக மரக்கன்றுகளை நட்டு பசுமைப் பூங்காக்களை உருவாக்க வேண்டும்.
உத்தங்குடி முதல் கப்பலூர் வரையிலான ரிங் ரோடு, கப்பலூர் முதல் வாடிப்பட்டி மற்றும் வாடிப்பட்டி முதல் சிட்டம்பட்டி வரையிலான 4 வழிச்சாலைகள், மாவட்டத்தின் பிற முக்கிய நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். வெப்ப அலையைத் தடுப்பதற்கான சிறப்புச் செயல்திட்டத்தை வகுப்பதுடன், இந்த பசுமை மீட்புப் பணிகளை உயர்நீதிமன்றமே நேரடியாகக் கண்காணிக்க வேண்டும்” என்று தன்னுடைய மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, காலநிலை மாற்றத்துறை, நீர்வளத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஆகிய முக்கிய அரசுத் துறைகளின் முதன்மை செயலாளர்கள் இதுகுறித்து விரிவான பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் மாதம் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.