சென்னை:
நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 3 சட்டசபைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. மிசோரமில் சோரம் மக்கள் இயக்கமும், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியைப் பிடித்தன. இதைத்தொடர்ந்து , மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், அமைச்சர்கள் பிரகலாத் சிங் படேல் மற்றும் ரேனுகா சிங் ஆகியோர் போட்டியிட்டு, வெற்றி பெற்றனர். இதனையடுத்து, இவர்கள் மூவரும் தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர். இதனை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவும் ஏற்றுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து அவர்கள் மூவரும் வகித்து வந்த துறைகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி, நரேந்திர சிங் தோமர் வகித்து வந்த வேளாண் துறை, மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டாவுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல், ஜல்சக்தி துறை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு உள்ளது.
வேளாண் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்தலேஜேவிடம் உணவு பதப்படுத்துதல் துறை வழங்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து, பழங்குடியினர் நலன், சுகாதார இணை அமைச்சர் பாரதி பவாரிடம் கூடுதல் பொறுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்





