மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தமிழ்நாடு முழுவதும் 3000 இடங்களில் நடைபெறும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைக்கும் விதமாக, கோடம்பாக்கம் மண்டலம், சைதாப்பேட்டை, கோதாமேடு ராஜ் திரையரங்கம் அருகில் நடைபெற்ற மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். இந்நிகழ்வின்போது தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர்
தமிழச்சி தங்கபாண்டியன், துணை மேயர் மு.மகேஷ் குமார், கூடுதல் தலைமைச் செயலாளர்/ ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், மத்திய வட்டார துணை ஆணையாளர் கே.ஜெ.பிரவீன் குமார், நிலைக்குழுத் தலைவர் (பொது சுகாதாரம்) கோ. சாந்தகுமாரி, மண்டலக் குழுத் தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






