மாநில பூப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மதுரை மாணவிகள் !

மதுரை:
பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாநில அளவிலான பூப்பந்து போட்டியில் தொடர்ந்து 16 ஆண்டுகளாகவும், தேசிய அளவிலான போட்டியில் தொடர்ந்து 6 ஆண்டுகளாகவும் வெற்றி பெற்று வருகின்றனர். மதுரை ஓசிபிஎம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள். மதுரை தல்லாகுளத்தில் அரசு உதவிபெறும் ஓசிபிஎம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கல்வியோடு, விளையாட்டிலும் மாணவிகள் சாதனை புரிந்து வருகின்றனர்.

பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் பாரதியார் தின குழுப் போட்டி, குடியரசு தின குழுப் போட்டிகளில் ஓசிபிஎம் பள்ளி மாணவிகள் 14 வயது, 17 வயது, 19 வயது பிரிவுகளில் பங்கேற்று தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்று வருகின்றனர். மாநில அளவிலான போட்டிகளில் தொடர்ந்து 16 ஆண்டுகள் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்திய பள்ளி விளையாட்டுக் குழுமம் நடத்தும் தேசிய அளவிலான போட்டிகளில் தொடர்ந்து 6 ஆண்டுகளாக வென்று வருகின்றனர். இதில் 5 முறை தங்கப்பதக்கம், 1 முறை வெள்ளிப் பதக்கம் வென்றனர். விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவிகள் தமிழ்நாடு விளை யாட்டு கவுன்சில் மூலம் கட்டணமின்றி கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர். பல மாணவிகள் மத்திய அரசு பணியில் உள்ளனர். இதுகுறித்து ஓசிபிஎம் பள்ளி உடற் கல்வி ஆசிரியர் ராஜேஷ்கண்ணன் தெரிவித்ததாவது: தொடர் வெற்றிக்கு மாணவிகளின் கடும் உழைப்பும், தீவிர பயிற்சியும்தான் காரணம். பள்ளி மைதானத்தில் காலை 6.30 முதல் 8.30 மணி வரை, மாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை பயிற்சி பெறுகின்றனர். தாளாளர் டேவிட் ஜெபராஜ் மாணவிகளுக்கு காலையில் இலவச உணவுக்கு ஏற்பாடு செய்துள்ளார். தலைமை ஆசிரியர் என்.மேரியும் உறுதுணையாக உள்ளார்.

70 பேரிலிருந்து 80 மாணவிகள் பயிற்சி பெறுகின்றனர். அண்மையில் தேசிய பூப்பந்து போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதை பாராட்டி தமிழக அரசு சார்பில் தலா 1 லட்சம் வீதம் 9 மாணவிகளுக்கு ஊக்கத்தொகையை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். இதுபோல், இதுவரை ரூ.40 லட்சம் வரை பரிசுத்தொகை பெற்றுள்ளோம். மாணவிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் பி.சர்மிளா, பெர்சீஸ் சிறப்பாக பயிற்சி அளித்து வருகின்றனர் என தெரிவித்தனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.