மகளிர் இடஒதுக்கீடு மசோதா – ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு !

சென்னை,
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:- ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையகம் தழைக்குமாம் என்ற மகாகவி பாரதியாரின் வரிகளுக்கு இணங்க, மகளிர் முன்னேற்றம் மலரவும், பெண்ணடிமை தீரவும், பெண்ணுரிமை வாழவும் பாடுபடுகின்ற இயக்கமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விளங்குகிறது.

1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அதிமுகு வை துவக்கியபோது உருவாக்கப்பட்ட கொள்கை விளக்கத்திலேயே நாடாளுமன்ற, சட்டமன்ற அமைப்புகளில் குறைந்தது 25 விழுக்காடு இடங்கள் மகளிருக்கு ஒதுக்கீடு அளிக்கவும், கொள்கை வகுக்கும் அமைப்புகளில் மகளிருக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கவும், ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைத்து துறைகளிலும் பங்கு பெறவும் வழிவகை செய்யப்பட்டது. ஜெயலலிதா அவர்கள் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

1991 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதன் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றபோது, 31 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள், அதாவது கிட்டத்தட்ட 15 விழுக்காடு பெண்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை பொறுத்த வரையில், ஆரம்பத்திலிருந்தே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு அளித்து வருகிறது.

முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்த மசோதா மாநிலங்களவையில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது அதனை ஆதரித்த இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை இந்தத் தருணத்தில் சொல்ல கடமைபட்டுள்ளேன். இருப்பினும், இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டதை கண்டித்து அறிக்கை வெளியிட்டதோடு இந்தச் சட்டமுன் வடிவு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியவர் ஜெயலலிதா.

இந்தச் சூழ்நிலையில், கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் முதல் அலுவலாக நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட உள்ளது என்பதும், நாளை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது என்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஜெயலலிதா கனவை நிறைவேற்றும் வகையில், நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமுன்வடிவிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது முழு ஆதரவினை நல்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயலலிதா கனவை நிறைவேற்றவுள்ள பிரதமர் அவர்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிடமுன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது பாராட்டினையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.