மாவட்ட இளையோர் தடகள போட்டிகள் திருவண்ணாமலையில் – 7-ந் தேதி தொடங்கிறது..

திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கில் வருகிற 7-ந் தேதி (வியாழக்கிழமை) மாவட்ட இளையோர் தடகள போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் அன்று காலை 8.30 மணியளவில் தொடங்குகிறது. போட்டி 14, 16, 18 மற்றும் 20 வயது என 4 பிரிவுகளாக மாணவ, மாணவிகளுக்கு தனித் தனியாக நடத்தப்பட உள்ளது. மாணவர்களுக்கு 60 மீட்டர் முதல் 5 ஆயிரம் மீட்டர் வரை ஓட்டப் பந்தையங்கள், நீளம் தாண்டுதல், குண்டு எரிதல், வட்டு எரிதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட உள்ளது. அதேபோல் மாணவிகளுக்கு 60 மீட்டர் முதல் 3 ஆயிரம் மீட்டர் வரை ஓட்டப் பந்தையங்கள், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எரிதல், வட்டு எரிதல் போன்ற போட்டிகளும் நடத்தப்பட உள்ளது. மாணவ, மாணவிகள் 2 தனிநபர் போட்டிகளில் மட்டுமே கலந்து கொள்ள முடியும். போட்டியில் பங்கேற்பவர்கள் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அல்லது நகராட்சி, மாநகராட்சியில் பிறந்ததற்கான அசல் பிறப்பு சான்றிதழ் கொண்டு வர வேண்டும். மேலும் போட்டியில் பங்கு பெறும் மாணவ, மாணவிகள் தங்களது நுழைவு படிவத்தினை எம்.எஸ். எக்சல் பார்மட்டில் இணைய வழி மூலமாக entrytvm@gmail.com என்ற முகவரிக்கு சமர்பித்திட வேண்டும். நேரடியாக கொண்டு வரும் படிவங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டது. நுழைவு படிவம் அனுப்ப வேண்டிய கடைசி நாள் வருகிற 6-ந் தேதி (புதன்கிழமை) மாலை 6 மணி வரை ஆகும். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்படும். இந்த போட்டிகளில் தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் வருகிற 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கத்தின் சார்பாக கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு மாவட்ட தடகள சங்கத்தை சேர்ந்த பிரபு மற்றும் சீனுவாசன் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கத் தலைவர் எ.வ.வே.கம்பன் கூறியுள்ளார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.