மே 1 உலகத் தொழிலாளர்கள் தின வாழ்த்துச் செய்தி

ஊடகச் செய்தி/அறிக்கை

மதிப்புமிகு அச்சு மற்றும் காட்சி ஊடக செய்தி ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
மே 1 உலகத் தொழிலாளர்கள் தின வாழ்த்துச் செய்தியை அவசியம் வெளியிட்டு உதவிட அன்புடன் வேண்டுகின்றேன்.
நன்றி!

மல்லை சி.ஏ.சத்யா
தலைவர்
திராவிட வெற்றிக் கழகம்
30/04/2026

மே 01 உலகத் தொழிலாளர்கள் தினம்

முதலாளித்துவத்தின் அஸ்தியிலேதான் சோசலிசக் குழந்தை பிறக்க முடியும் உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள் இழப்பதற்கு ஒன்றும் இல்லை ஆனால் பெறுவதற்கு இந்த பொன்னான உலகம் இருக்கிறது என்ற அறிஞர் கார்ல் மார்க்ஸ் அவர்களின் தத்துவத்தை இதயத்தில் ஏந்திய உலகத் தொழிலாளர் வர்க்கத்தின் ரத்தம் தொய்ந்த நெடிய வரலாறு!

1830 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் நெசவுத் தொழிலாளர்கள்
15 மணி நேர கட்டாய வேலையைக் கண்டித்து நடத்திய போராட்டம்!

1832 ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டில் கப்பலில் தச்சுத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நேரத்தை கண்டித்தும்
10 மணிநேர வேலை என்ற கோரிக்கையை முன்வைத்தும் நடத்திய போராட்டம்!

1848 இங்கிலாந்து நாட்டின் தலைநகர் இலண்டனில் 12-18 மணிநேர கட்டாய வேலையை கண்டித்து சாசன இயக்கத்தினர் நடத்திய போராட்டம்!

1856 ஆஸ்திரேலியா நாட்டில் தலைநகர் மெல்போர்னில் கட்டிடத் தொழிலாளர்கள்
8 மணிநேர வேலை கோரிக்கையை வலியுறுத்தி நடத்திய போராட்டம்!

காலத்திடம் நீ பயந்தாலும் பணிந்தாலும் விரட்டும் துணிந்தால் மட்டுமே உனக்கு கட்டுப்படும் என்பதற்கு இணங்க
ரஷ்யா நாட்டில் 1895 முதல் தொடர்ச்சியாக நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக லெனின் அவர்களின் தொழிலாளர் நலன் குறித்து தந்த அறிக்கை அதன் தொடர்ச்சியாக
8 மணி நேர வேலை வேண்டி நடத்திய போராட்டம்!

1886 அமெரிக்க நாட்டில் சிக்காகோ நகரில் நடைபெற்ற தொழிலாளர்கள் போராட்டம், அதன் விளைவாக காவல் துறை துப்பாக்கிச் சூடு உயிர் பலி!
1887 தொழிலாளர்கள் தூக்கு அமெரிக்காவின் கருப்பு தினமானது.

இதன் தொடர்ச்சியாக 1889 ஆம் ஆண்டு ஜூலை 14 அன்று பிரான்ஸ் நாட்டுத் தலைநகர் பாரிசில் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் தலைமையில் 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் அவர்கள் முன்மொழிந்த
8 மணிநேரம் வேலை 8 மணிநேரம் ஒய்வு
8 மணிநேரம் உறக்கம் என்ற கோரிக்கையை நிறைவேற்றவும் சிக்காகோ நகர் வீதியிலே சிந்திய ரத்த வெள்ளத்திலே துவைத்து எடுத்த செங்கொடிக்கு வீரவணக்கம் செலுத்தவும்
1890 ஆம் ஆண்டு
மே 1 ஆம் நாள் தொழிலாளர்கள் அகிலம் ஒன்றினைந்து தங்கள் இருப்பை நிலைநிறுத்த தொடர்ந்து இயக்கங்கள் நடத்திட முடிவெடுத்தது பின்னாளில் அதுவே மே 1 சர்வதேச தொழிலாளர் தினமாக மாறியது. இன்று உலகில் ஒரு சில நாடுகள் தவிர்த்து பெரும்பாலான நாடுகளில் மே தினம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில்
1923 ஆம் ஆண்டு முதன்முதலாக சென்னை மெரினா கடற்கரையில் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் அவர்கள் தலைமையில் மே தினம் கொண்டாடப்பட்டது. அதன் விளைவாக கர்மவீரர் காமராஜர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது 1959 ஜனவரி 25 அன்று சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலையை நிறுவினார்.

1969 ஆம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது தொழிலாளர் தினம் விடுமுறை நாளாக அறிவித்தது.

1990 ஆம் ஆண்டு
வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்த போது மே 1 இந்திய முழுமைக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவித்தார்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் 1927 முதல் நேப்பியர் பூங்காவாக இருந்ததை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது 1990 ஆம் ஆண்டு
மே தினப் பூங்காவாக அறிவித்தார்.

மதவாத சனாதன சக்திகள் மக்களிடம் காசியையும் கைலாயித்தையும் கருத்தியலாக பேசி வந்த காலகட்டத்தில்
2026 பிப்ரவரி 05 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தலைவர் திரு.தளபதி அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் பாட்டாளி வர்க்கத்தின் பேராசான் கார்ல் மார்க்ஸ் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்து தொழிலாளர் வர்க்க பொதுவுடைமைக் கருத்தியலை முன்னிறுத்தினார்.

உலகத் தொழிலாளர்கள் தினம் சும்மா வந்து விடவில்லை ரத்தம் சித்தியும் உயிர்களைப் பலி கொடுத்தும் கருத்தியல் பரப்பளால் பெற்ற உரிமையே
மே 1 உலகத் தொழிலாளர்கள் தினம் அந்த தொழிலாளர் வர்க்கத்திற்கு திராவிட வெற்றிக் கழகத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக !

என்றும் மறுமலர்ச்சிப் பாதையில்…

மல்லை சி.ஏ.சத்யா
தலைவர்
திராவிட வெற்றிக் கழகம்
30/04/2026

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.