அண்மை செய்தி
முன்னாள் அமைச்சர் மாசு முன்னிலையில் த.வெ.க. நிர்வாகிகள் 50 பேர் திமுகவில் இணைந்தனர் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) 2026 விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் “ராஜினாமாவால் மூடி மறைக்க முடியாது” மாணவர்களுக்கு எதிரான தற்போதைய வன்முறை: சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அலுவலகத்தை, அதே வளாகத்தில் அமைந்துள்ள 10 அடுக்குகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொன்மை வாய்ந்த கோட்டை பிரதான கட்டிடத்தில் நிலவும் இடநெருக்கடி, வாகன நிறுத்துமிட வசதிக்குறைவு மற்றும் மரபுவழிக் கட்டிடக் கட்டுப்பாடுகள் காரணமாக நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த இடமாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மோதல் உருவானால் நல்லது என கருதுகின்ற கட்சிகள்தான் பாமக, பாஜக: திருமாவளவன் பேட்டி

திருவண்ணாமலை:
திருவண்ணாமலைக்கு சென்றிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம் அமைக்கப்பட்டு வருவது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின், திமுக கூட்டணியின் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்துள்ளார். அவரது துணிச்சலான முடிவை நெஞ்சார பாராட்டி விசிக வரவேற்கிறது. திமுக முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் விசிக உற்ற துணையாக இருக்கும்.
பாஜக தலைமையிலான சனாதன சக்திகளை, 2024-ல் நடைபெறக் கூடிய நாடாளுமன்ற தேர்தலில் வீழ்த்த வேண்டும் என முக ஸ்டாலின் அழுத்தமாக கூறிப்பிட்டுள்ளார்.
திமுகவுக்கும், விசிகவுக்கும் இடையே உரசல், முரண்பாடு மற்றும் இடைவெளியை உருவாக்க, சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றனர். இதற்கு வாய்ப்பு இல்லை. கூட்டணி தொடர்பான நிலைபாடு, ஆட்சி நிர்வாகத்தில் ஏற்படுகின்ற சிறிய பிரச்சினைகளை எவ்வாறு கையாளுவது என விசிகவுக்கும் தெளிவு இருக்கிறது, திமுகவுக்கும் புரிதல் இருக்கிறது.
திருமாவளவன் உள்நோக்கத்துடன் பேசுகிறார், முதல்வரை பாமக தலைவர் சந்தித்தால் அச்சப்படுகிறேன், கலக்கமடைகிறேன் எனப் பேசுகின்றனர். கற்பனையான கருத்து. முதல்வர் என்ற முறையில் யாரும் சந்திக்கலாம், பாஜகவினரும் சந்திக்கலாம். பிரதமர் என்ற முறையில், அவரை நானும் சந்திக்கலாம். ஒருவரையொருவர் சந்திப்பதால் கூட்டணி வைக்க போகிறோம் என்பதல்ல.
பாமகவுக்கு ஒரு கலாச்சாரம் உண்டு. கூட்டணியில் இருப்பார்கள், தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு, எந்தக் கூட்டணியில் இருந்தார்களோ, அந்தக் கூட்டணியில் இருந்து விலகி இருப்பார்கள். பேரத்தின் வலிமையை கூட்டுவதற்கு, ஒரு சூழ்ச்சி மற்றும் தந்திரத்தின் அடிப்படையில் பாமக செயல்படுகிறது. அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகி இருக்கிறது.
திமுகவுடன் பேசிக் கொண்டே அதிமுகவுடன் பேரத்தை முடிப்பது, அதிமுகவுடன் பேசி கொண்டே திமுகவுடன் பேரத்தை முடிப்பது, இதுதான் பாமகவின் தேர்தல் தந்திரம்.
திமுக கூட்டணியில் விசிக உறுதியாக இருக்கிறது. அகில இந்திய அளவில் அனைத்து எதிர் கட்சிகளையும் ஒருங்கிணைக்க திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்க வேண்டும், முன்மொழிய வேண்டும், இதற்கான முயற்சிகளை முன்னின்று செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம். திமுகவுக்கும், விசிகவுக்கும் இடையே எந்த சக்தியாலும் இடைவெளியை ஏற்படுத்த முடியாது.
மேற்கு மாவட்டங்கள் அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும், திமுகவுக்கு சாதகமாக இருக்காது என சிலர் கூறிய ஆரூடம், பொய்த்துப் போனது. மேற்கு மாவட்ட அரசியல் வரலாற்றில், திமுக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
பாமக என்ற சாதி வெறி கட்சியுடனும், பாஜக என்ற மதவெறி கட்சியுடன், எந்த காலத்திலும் கூட்டணி இல்லை. அவர்கள் இடம் பெறுகின்ற அணியில் இருக்க மாட்டோம் என விசிக கொள்கை முடிவு எடுத்துள்ளது. ஒரு சமூகத்தின் நலனுக்கு பாடுபடுவது தவறில்லை. ஒரு சமூகத்தின் மக்களின் உணர்வுகளை கட்சியின் வளர்ச்சிக்காகவும், நலனுக்காகவும் தூண்டிவிடுவது, அதையே பயன்படுத்திக் கொள்வது என்பதுதான் மத வெறியாகவும், சாதி வெறியாகவும் மாறுகிறது. இதனால் பகை, மோதல், முரண்பாடு உருவாகிறது.
மோதல் உருவானால் நல்லது என கருதுகின்ற கட்சிகள்தான் பாமக, பாஜக. அப்படிப்பட்ட யுக்திகளைதான் அவர்கள் கையாளுகின்றனர். வடக்கில் முஸ்லிம் வெறுப்பை பயன்படுத்தி வென்றார்கள், தருமபுரியில் தலித் வெறுப்பை பயன்படுத்தி வென்றார்கள். இவர்கள் இரண்டு பேரும் ஓரே வழியில் பயனிப்பவர்கள். நாங்கள், எங்கள் கட்சி சார்ந்து ஒரு கொள்கை முடிவு எடுத்துள்ளோம். இது மக்களுக்கான செய்தி, வேறு யாருக்கும் இல்லை” என்று திருமாவளவன் கூறினார்.

சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அலுவலகத்தை, அதே வளாகத்தில் அமைந்துள்ள 10 அடுக்குகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொன்மை வாய்ந்த கோட்டை பிரதான கட்டிடத்தில் நிலவும் இடநெருக்கடி, வாகன நிறுத்துமிட வசதிக்குறைவு மற்றும் மரபுவழிக் கட்டிடக் கட்டுப்பாடுகள் காரணமாக நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த இடமாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர்

சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) என்ஆர்ஐ கிளையின் மேலாளரைத் தாக்கிய குற்றச்சாட்டின்கீழ், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகளான கயல்விழி மீது அடையாறு காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட்