அண்மை செய்தி
முன்னாள் அமைச்சர் மாசு முன்னிலையில் த.வெ.க. நிர்வாகிகள் 50 பேர் திமுகவில் இணைந்தனர் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) 2026 விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் “ராஜினாமாவால் மூடி மறைக்க முடியாது” மாணவர்களுக்கு எதிரான தற்போதைய வன்முறை: சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அலுவலகத்தை, அதே வளாகத்தில் அமைந்துள்ள 10 அடுக்குகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொன்மை வாய்ந்த கோட்டை பிரதான கட்டிடத்தில் நிலவும் இடநெருக்கடி, வாகன நிறுத்துமிட வசதிக்குறைவு மற்றும் மரபுவழிக் கட்டிடக் கட்டுப்பாடுகள் காரணமாக நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த இடமாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ரஷியாவுக்கு உதவினால் கடும் விலை கொடுக்க வேண்டி இருக்கும்: ஜி-7 நாடுகள் எச்சரிக்கை

டோக்கியோ:
ஜப்பான் நாட்டில் கரூய்ஜவா நகரில் ஜி-7 நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்ட 2 நாள் மாநாடு நடந்தது. இதில் ஜி-7 உறுப்பு நாடுகளான இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் முக்கிய தலைவர்களுடன் ஐரோப்பிய யூனியன் அமைப்பும் கூட்டத்தில் பங்கேற்றன.
இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன் பின்னர் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அதில், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு ஆயுதங்களை வழங்கும் 3-வது நபரை தடுக்கும் வகையில் நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம். உக்ரைன் போருக்கு ஆதரவு தெரிவிப்போருக்கு எதிராக தொடர்ந்து நாங்கள் நடவடிக்கைகளை எடுப்போம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில், பெலாரஸ் நாட்டு எல்லை அருகே அணு ஆயுதங்களை குவிக்க ரஷியா முடிவு செய்து உள்ளது என தகவல் வெளியானது. ரஷிய தூதர் வெளியிட்ட இந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. ரஷிய அதிபரும் அதனை மேற்கோள் காட்டி பேசி இருந்தது உலக நாடுகள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது.
இதற்கும் உறுப்பு நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. உக்ரைன் மீது நடத்தப்படும் போரானது ஒரு தீவிர சர்வதேச சட்ட விதிமீறலை ஏற்படுத்தி உள்ளது என குறிப்பிட்டதுடன், உக்ரைனில் இருந்து உடனடியாகவும், நிபந்தனையின்றியும் அனைத்து படைகள் மற்றும் தளவாடங்களை ரஷியா திரும்ப பெற வேண்டும் என மீண்டும் வலியுறுத்தி உள்ளது.
உக்ரைன் போரில் ரசாயனம், உயிரி ஆயுதங்கள் மற்றும் அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் கடுமையான விளைவுகளை ரஷியா சந்திக்க வேண்டி இருக்கும் என்று ஜி-7 நாடுகள் கூட்டாக எச்சரிக்கை விடுத்து உள்ளன. இதேபோன்று ஆப்கானிஸ்தான் விவகாரம், ரஷியாவின் படையெடுப்பு உள்பட மண்டல அளவிலான சவால்களை எதிர்கொள்ளும் மத்திய ஆசிய நாடுகளுடன் இணைந்து பணியாற்றவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்து உள்ளது. தைவான் பகுதியில் அமைதி, பாதுகாப்பு என்பது தவிர்க்க முடியாத விசயம் என ஒப்பு கொண்டதுடன், சர்வதேச சமூகத்தில் ஒரு பொறுப்புள்ள உறுப்பினராக செயல்படும்படி சீனாவையும் கேட்டு கொண்டு உள்ளது.

சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அலுவலகத்தை, அதே வளாகத்தில் அமைந்துள்ள 10 அடுக்குகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொன்மை வாய்ந்த கோட்டை பிரதான கட்டிடத்தில் நிலவும் இடநெருக்கடி, வாகன நிறுத்துமிட வசதிக்குறைவு மற்றும் மரபுவழிக் கட்டிடக் கட்டுப்பாடுகள் காரணமாக நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த இடமாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர்

சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) என்ஆர்ஐ கிளையின் மேலாளரைத் தாக்கிய குற்றச்சாட்டின்கீழ், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகளான கயல்விழி மீது அடையாறு காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட்