சென்னை:
நமது நாட்டில் சமையல் என்றாலே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது வெங்காயம். கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால் இதன் விலை உச்சத்தை தொட்டுள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 60 முதல் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை கடைகளில் ஒரு கிலோ 80 ரூபாயை தாண்டியுள்ளது. எனவே வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இதையடுத்து மத்திய அரசு சார்பாக மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள வெங்காய குடோனில் இருந்து பல மாநிலங்களுக்கு வெங்காயத்தை டன் கணக்கில் அனுப்பி வருகிறது.
விலை உயர்வால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் குறைந்த விலையில் வெங்காயத்தை விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக நகர்ப்புறத்தில் அமைந்துள்ள 8,233 நியாய விலைக் கடைகள் மூலம் 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வெங்காயம் வழங்கப்படவுள்ளது. குடும்ப அட்டைக்கு ஒன்றுக்கு ஒரு கிலோ விதம் வெங்காயம் வழங்கப்படும், 1 கிலோ 35 ரூபாயில் நகர்புறத்தில் அமைந்துள்ள கூட்டுறவு பட்டாக்க சாலைகள். பிரதான கூட்டுறவு பண்டகசாலைகள். அமுதம் அங்காடி நகர்புறத்தில் அமைந்துள்ள நியாயவிலை கடைகளில் விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்தநிலையில் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் பி.வெங்கட ரமணன் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் வ.காந்திராஜ் ஆகியோர் இன்று (03.09.2026) காலை 9.00 மணியளவில் சென்னை, ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் நகரில் உள்ள (டி.யு.சி.எஸ். லிட்.), திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க நியாயவிலைக் கடை என 4 கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யும் திட்டத்தினை தொடங்கி வைத்தனர். இதில் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ அருண் பிரகாசம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.







