அண்மை செய்தி
கடந்த ஆண்டை விட 15.4% அதிகரித்த ஜிஎஸ்டி வசூல் ரேஷன் கார்டு விரல் ரேகை பதிவு செய்யவில்லையா? -இன்று! சிறப்பு முகாம் முதல்வர் அலுவலகம் இடமாற்றப் பணிக்கு ரூ.11 கோடி ஒதுக்கீடு கேரள மழைக்கு 8 பேர் பலி; சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல தடை மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பான விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சி ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தின் நீர்வள உரிமை குறித்துக் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார் தி.மு.க.வில் தோப்பு வெங்கடாசலம் பதவி பறிப்பு: த.வெ.க.வில் இணைகிறாரா?

ரேஷன் கார்டு விரல் ரேகை பதிவு செய்யவில்லையா? -இன்று! சிறப்பு முகாம்

ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு தற்போது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. எனவே, இதுவரை விரல் ரேகை பதிவு செய்யாத பொதுமக்கள், உடனடியாக அதனை செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளில் இ-கே.ஒய்.சி. பதிவு சிறப்பு முகாம் ஆகஸ்ட் 2-ஆம் தேதியான இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்று வருகிறது. பணி நிமித்தமாக வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவர்கள் இப்போது வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைக்கு சென்று தங்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்யலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2 கோடியே 28 லட்சத்து 9 ஆயிரத்து 108 குடும்பங்களுக்கு பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் மானிய விலையில் அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், 93 லட்சம் முன்னுரிமை கார்டுகள், 18.45 லட்சம் அந்தியோதயா கார்டுதாரர்களுக்கான அரிசி, கோதுமையை, மத்திய அரசு இலவசமாக வழங்குகிறது. அதன்படி, முன்னுரிமை கார்டுக்கு, குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா, 5 கிலோ அரிசியும்; அந்தியோதயா கார்டுக்கு, 35 கிலோ அரிசியும் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் உள்ள, ‘பாயின்ட் ஆப் சேல்’ எனப்படும் விற்பனை முனைய கருவியில், கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர் அனைவரின் விரல் ரேகை அல்லது கருவிழி பதிவு செய்யப்பட்டு, உண்மை தன்மை சரிபார்க்கப்படுகிறது. மொத்தம், 3.65 கோடி உறுப்பினர்களில் இன்னும், 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் விரல் ரேகை பதிவு செய்யாமல் உள்ளனர்.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ன்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகள் (பிஎச்எச்) மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா (ஏஏஒய்) குடும்ப அட்டைகள் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள பயனாளிகளின் ஆதார் விவரங்களை உறுதிப்படுத்தும் நோக்கில், குடும்ப அட்டையில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து உறுப்பினர்களின் மின்னணு விரல்ரேகை சரிபார்ப்பு இ-கே.ஒய்.சி. மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கான பணிகள் கடந்த 2023, அக்டோபர் மாதம் முதல் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் இந்த இரு கார்டுகளிலும் மொத்தம், 3.65 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களின் உண்மை தன்மையை சரிபார்க்குமாறு, தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களுக்கும், 2024ல், மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளில் இ-,கே,ஒய்,சி , பதிவு சிறப்பு முகாம் இன்று (ஆகஸ்ட் 2-ஆம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இது தொடர்பாக அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ள கடைகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் சென்னை மண்டல கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நியாயவிலைக் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளில் இ-கே ஒய் சி பதிவு சிறப்பு முகாம் ஆகஸ்ட் 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தங்கள் குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கைவிரல் ரேகையை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். தற்போது வரை கைவிரல் ரேகையை பதிவு செய்யாதவர்கள் ஆகஸ்ட் 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து நியாயவிலைக் கடைகளில் நடைபெறும் சிறப்பு முகாமிற்கு சென்று தங்களது கைவிரல் ரேகையினை பதிவு செய்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
பணி நிமித்தமாக வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவர்கள் இப்போது வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைக்கு சென்று தங்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே, அரசின் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் விரல் ரேகைப் பதிவை விடுதலின்றி முழுமையாக பதிவு செய்ய வேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார் என்று சென்னை மண்டல கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியம் என்பது மொழி, இன உரிமை என பன்மைத்துவம் கொண்டது: திருமாவளவன்

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி

திருவள்ளூர் கோர்ட் வாசலில் ரவுடியை கொல்ல முயற்சி: கவுன்சிலரின் கணவர் உட்பட 6 பேர் கைது

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் ஜோசப். அந்த பகுதியில் ரவுடியான வலம்

ரேஷன் கார்டு விரல் ரேகை பதிவு செய்யவில்லையா? -இன்று! சிறப்பு முகாம்

தமிழ் தேசியம் என்பது மொழி, இன உரிமை என பன்மைத்துவம் கொண்டது: திருமாவளவன்

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி

திருவள்ளூர் கோர்ட் வாசலில் ரவுடியை கொல்ல முயற்சி: கவுன்சிலரின் கணவர் உட்பட 6 பேர் கைது

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் ஜோசப். அந்த பகுதியில் ரவுடியான வலம்