வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த கியூஆர் குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டை முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது

வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகாரமில்லாத நபர்கள் யாரேனும் வருவதற்கான சாத்தியக்கூறினை நீக்குவதற்காக இசிஐநெட் தளத்தில் கியூஆர் குறியீடு அடிப்படையிலான புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.2026 மே 4 அன்று அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்கம், புதுச்சேரி ஆகியவற்றின் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் 5 மாநிலங்களின் 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் ஆகியவற்றின் வாக்கு எண்ணிக்கைக்காக தொடங்கப்படும் இந்த நடைமுறை எதிர்காலத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கான அனைத்து பொதுத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.இந்தப் புதிய கியூஆர் குறியீடு அடிப்படையிலான புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் பெறுவது, வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் கூடங்களுக்கு செல்ல தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் அதிகாரிகள், வாக்கு எண்ணும் ஊழியர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள், வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் உள்ளிட்டோருக்கு பொருந்தும்.வாக்கு எண்ணிக்கை மையம் ஒவ்வொன்றிலும், வாக்கு எண்ணும் கூடங்களுக்கு அருகே அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு ஊடக மையம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அங்கீகார கடிதங்கள் அடிப்படையில் ஊடகவியலாளர்களின் நுழைவு இருக்கும்.தடையில்லாத, பாதுகாப்பான அணுகல் கட்டுப்பாட்டை உறுதிசெய்ய நிர்ணயிக்கப்பட்ட சோதனை இடங்களில் பயிற்சி பெற்ற ஊழியர்களை பணியமர்த்துவது உட்பட, இந்த நடைமுறையை தீவிரமாக செயல்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.உயர்தரத்திலான வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் வாக்கு எண்ணும் நடைமுறையில் சிறந்த திறன் ஆகியவற்றை நிலைநிறுத்த இந்த அறிவுறுத்தல்கள் கண்டிப்புடன் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து தலைமைத் தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் உதவி அதிகாரிகள் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.