12-ம் வகுப்புக்கு மீண்டும் இருபருவ தேர்வு முறை: வரைவு தேசிய பாடத்திட்டத்தில் தகவல்

புதுடெல்லி:
புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு ஏற்ப தேசிய பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும் பணி நடந்து வருகிறது. தேசிய பாடத்திட்டம், இதுவரை 4 தடவை மாற்றப்பட்டுள்ளது. கடைசியாக, 2005-ம் ஆண்டு மாற்றப்பட்டது. தற்போது மீண்டும் இப்பணி நடந்து வருகிறது. இது இறுதிக்கட்டத்தில் உள்ளது. விரைவில், கல்வியாளர்கள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரின் கருத்துகளை பெறுவதற்காக இணையதளத்தில் வெளியிடப்படும் என்று மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பிறகு, 2024-2025 கல்வி ஆண்டில் இருந்து இது அமலுக்கு கொண்டுவரப்படும் என்று தெரிகிறது.
கொரோனா காலத்தில், ஒருமுறை நடவடிக்கையாக, 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகளுக்கு இருபருவ தேர்வுமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பழைய பாணியிலேயே ஆண்டு இறுதி தேர்வாக நடத்தப்பட்டது.
இருப்பினும், வரைவு தேசிய பாடத்திட்டத்தில், 11 மற்றும் 12-ம் வகுப்புக்கு மீண்டும் இருபருவ தேர்வு முறை கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு இருபருவ தேர்வு முறை தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான இறுதி மதிப்பெண்ணுக்கு முந்தைய வகுப்புகளின் மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது, 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், அறிவியல், கலை அல்லது மனிதநேயம், வணிகவியல் ஆகிய பிரிவுகளில் எந்த படிப்பையும் கலந்து படிக்கலாம். அந்த வழக்கத்தை ரத்து செய்யவும் வரைவு தேசிய பாடத்திட்டத்தில் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.