சென்னை பள்ளிகள் மற்றும் அதில் பயிலும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக மேயர் 2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ள கல்வித்துறைக்கான அறிவிப்புகளை மேயர் ஆர்.பிரியா அவர்கள் நேற்று (13.07.2023) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் செயல்பாட்டிற்கு தொடங்கி வைத்து, அறிவிப்புகளில் ஒன்றான சென்னை பள்ளிகளின் முகப்பு மற்றும் பள்ளி செயல்பாடுகளில் செயல்படுத்தும் விதமாக சென்னை பள்ளிகளுக்கான இலச்சினையினை செயல்பாட்டிற்கு வெளியிட்டு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், துணை மேயர் மு. மகேஷ் குமார், கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் ஜெ. இராதாகிருஷ்ணன், துணை ஆணையாளர் (கல்வி) ஷரண்யா அறி, நிலைக்குழுத் தலைவர் (கல்வி) த. விஸ்வநாதன், கல்வி நிலைக்குழு உறுப்பினர்கள், கல்வி அலுவலர் உதவிக் கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






