அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

21-ந்தேதி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை- டாக்டர்கள் தகவல்….

முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின் போது போக்குவரத்து துறையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு மோசடி விவகாரத்தில் சட்ட விரோதமாக பணபரிமாற்றம் நடைபெற்று இருப்பதாக குற்றம் சாட்டி அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் கடந்த 13-ந்தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற் கொள்ளப்பட்ட பரிசோதனையில் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு இருதய ஆபரேசன் செய்ய டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து ஆழ்வார்பேட்டை காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள செந்தில்பாலாஜிக்கு அறுவை சிகிச்சையை மேற் கொள்வதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக காவேரி மருத்துவ மனை டாக்டர்கள் குழவினர் செந்தில்பாலாஜிக்கு பல்வேறு பரிசோதனைகளை செய்துள்ளனர். இதன் முடிவுகளில் அறுவை சிகிச்சையை மேற் கொள்வதற்கு செந்தில் பாலாஜியின் உடல் முழு தகுதியுடன் இருக்கிறதா? என்பது பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். இதையடுத்து வருகிற 21-ந்தேதி (புதன்கிழமை) செந்தில்பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதைத்தொடர்ந்து நாளையும், நாளை மறுநாளும் இருதய ஆபரேசனுக்கு தேவையான இறுதிக்கட்ட உடல் பரிசோதனைகளை செந்தில்பாலாஜிக்கு மேற் கொள்ள இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

வருகிற 21-ம் தேதி அன்று செந்தில்பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டால் தொடர்ச்சியாக சில நாட்கள் வரை அவர் ஓய்வு எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அதுபோன்ற ஒரு நிலைமை ஏற்பட்டால் அமலாக்கத் துறையினரால் செந்தில் பாலாஜியிடம் உடனடியாக விசாரணை செய்ய முடியாத நிலை ஏற்படும் . செந்தில்பாலாஜியை 8 நாட்கள் காவலில் எடுத்து அமலாக்கத்துறையினர் நேற்று அவரிடம் முதல்நாள் விசாரணையை தொடங்கி விடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அமலாக்கத்துறையினர் நேற்று காலை 10 மணிக்கே வந்து விடுவார்கள் என்று கூறப்பட்ட நிலையில் நேற்று முழுவதுமே அமலாக்கத்துறையினர் காவேரி ஆஸ்பத்திரிக்கு வரவில்லை.

செந்தில்பாலாஜியை காவலில் வைத்து விசாரிப்பதற்கு அமலாக்கத்துறையினருக்கு நேற்று முன்தினம் (16-ந்தேதி) மாலையில் அனுமதி கிடைத்தது. இதன் மூலம் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறை காவலில் இன்று 3-வது நாளாக உள்ளார். வருகிற 21-ந் தேதி ஆபரேசன் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், அடுத்த 2 நாட்களில் (23-ந்தேதி) அமலாக்கத்துறை காவல் முடிவடைகிறது. இதனால் செந்தில்பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவது எப்போது? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. 8 நாள் காவலில் செந்தில்பாலாஜியிடம் சரியாக விசாரணை நடத்த முடியாமல் போனால் அதையே காரணமாக கூறி மேலும் சில நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யலாம் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.

அதே நேரத்தில் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் சில நாட்கள் கழித்து அவரை மீண்டும் காவலில் எடுக்கலாமா? என்பது பற்றியும் அமலாக்கத்துறையினர் ஆலோசித்து வருவதாகவும் தெரிகிறது. இதற்கிடையே செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்பாக இ.எஸ்.ஐ. மருத்துவக்குழு மற்றும் ஜிப்மர் மருத்துவ குழு, எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆகியோரிடம் அமலாக்கத் துறையினர் மருத்துவ அறிக்கையை கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்