அண்மை செய்தி
பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார் திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் IIT Madras Launches Advanced Ocean Engineering Research Facility Funded by Mazagon Dock Shipbuilders Limited தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது. சட்டப்பேரவையில் 44 ஆக குறையும் அதிமுகவின் பலம்

27வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து அணி தகுதி பெற்றுள்ளது…..

தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் பைனலில் விளையாட தமிழ்நாடு அணி தகுதி பெற்றுள்ளது. கடந்த 12ம் தேதி தொடங்கி நடந்து வரும் இத்தொடரின் முதலாவது லீக் சுற்றில் மேற்கு வங்கம், அருணாச்சல், உத்தர பிரதேசம் அணிகளை வீழ்த்திய தமிழ்நாடு அணி தனது பிரிவில் 9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. அடுத்து நடந்த 2வது லீக் சுற்றின் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த தமிழ்நாடு அணி ஒடிஷா (3-0), ஜார்க்கண்ட் (3-0), சண்டிகர் (3-0), கர்நாடகா (4-0), பஞ்சாப் (4-0) அணிகளை வீழ்த்தி 15 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்ததுடன் அரையிறுதிக்கும் முதல் அணியாக முன்னேறியது.இதைத் தொடர்ந்து, நேற்று நடந்த முதல் அரையிறுதியில் தமிழ்நாடு – ரயில்வே அணிகள் மோதின. அதில் தமிழ்நாடு 3-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. 3வது நிமிடத்தில் பிரியதர்ஷினி, 53வது நிமிடத்தில் இந்துமதி கதிரேசன் கோல் அடித்தனர். 47வது நிமிடத்தில் ரயில்வே வீராங்கனை சுப்ரியா ரவுத்ரே அடித்த சுயகோல் தமிழ்நாட்டின் கோல் எண்ணிக்கையை உயர்த்தியது. ரயில்வே தரப்பில் திபர்னிதா தேவ் (93வது நிமிடம்) ஆறுதல் கோல் போட்டார்.

இந்த வெற்றியின் மூலம், 5 ஆண்டுகளுக்கு பிறகு சீனியர் மகளிர் கால்பந்து பைனலுக்கு தமிழ்நாடு அணி முன்னேறி உள்ளது. இறுதி ஆட்டம் நாளை நடைபெற உள்ளது. தமிழக அணியில் இடம் பெற்றுள்ள வீராங்கனைகள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் (எஸ்டிஏடி) பயிற்சி பெற்றவர்கள். நடப்பு தொடரில் தமிழ்நாடு அணி ஒரு போட்டியில் கூட தோற்காமல் பைனலுக்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்