அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

3வது அணி அமைக்க ஓபிஎஸ் திட்டம் – சீமான், டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்பட முடிவு….

பா.ஜ.க கைவிட்டதால் அதிருப்தியில் உள்ள ஓ.பன்னீர்செல்வம், சீமான், டிடிவி தினகரனுடன் இணைந்து 3வது அணி அமைக்க முடிவு செய்துள்ளார். அதிமுகவில் இருந்து பிரிந்து தனி அணியாக செயல்பட்டு வந்த ஓ.பன்னீர்செல்வம், பாஜகாவின் ஆதரவை பெரிதும் நம்பியிருந்தார். ஆனால் பாஜவோ எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகிய 3 பேரையும் ஒரே தட்டில் வைத்து பார்த்து வந்தது. தேர்தல் நெருங்கியதும், பன்னீர்செல்வத்தை ஓரம்கட்டி விட்டது. எடப்பாடி பழனிசாமியுடன்தான் கூட்டணி என்று முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆதரவு தெரிவித்தது. அதேநேரத்தில் கட்சி மற்றும் சின்னம் விவகாரத்திலும் பாஜ எந்த உதவியும் செய்யவில்லை. இதனால் பாஜ மீது கடும் அதிருப்தி இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்து வருகிறார். மேலும் பாஜ மேலிடத்தை சந்தித்து கூட்டணி குறித்து முடிவு செய்ய பல முறை முயன்றும் அவருக்கு அமித்ஷா நேரம் ஒதுக்கவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பன்னீர்செல்வம் தவித்து வருகிறார். கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்துக்கு கூட பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதேநிலையில்தான் டிடிவி தினகரனும் உள்ளார்.

இவர்கள் இருவரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அமித்ஷா, எடப்பாடி பழனிசாமியிடம் கூறினாலும் அவர் ஏற்றுக் கொள்ளாததால், பாஜ இருவரையும் கைவிட்டு விட்டது. இதனால் இருவரும் தற்போது இணைந்துள்ளனர். தற்போது இவர்கள் இணைந்து ஆலோசித்து வருகின்றனர். இந்தநிலையில், சீமானுடன் இணைந்து 3வது அணி அமைப்போம் என்று பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வலியுறுத்தத் தொடங்கிவிட்டனர். பல மாவட்டங்களில் 10 சதவீதம் வரை ஓட்டுக்களை சீமான் வைத்துள்ளார். இதனால் சீமானுடன் கூட்டணி சேர்ந்தால், தென் மாவட்டங்களில் ஆளும் கட்சிக்கு அடுத்தபடியாக 2வது இடத்தைப் பிடிக்கலாம். அதிமுக மற்றும் பாஜ கூட்டணியை 3வது இடத்துக்கு தள்ளிவிடலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக தேனியில் ரவீந்திரநாத், சிவகங்கை அல்லது ராமநாதபுரம், விருதுநகரில் டிடிவி தினகரன் ஆகியோரை நிறுத்தினால் பெரிய அளவில் ஓட்டுக்களை பிரித்து விடலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் சீமானுடன் இணைந்து பணியாற்றுவது நல்லது என்றும் பன்னீர்செல்வத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். இதனால் அவர் 3வது அணி அமைப்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். விரைவில் சீமானுடன் பேச்சுவார்த் நடத்தவுள்ளதாக தற்போதே கூட்டணியை தொடங்கி தமிழகத்தில் 3வது அணியை பன்னீர்செல்வம் உருவாக்குவார் என அவரது ஆதரவர்களின் எதிர்பார்ப்பாகவே உள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக பாஜகவுக்கு எதிராக தனது கருத்துக்களை பன்னீர்செல்வம் தெரிவிக்கத் தொடங்கிவிட்டார். இனி வேகமாக பாஜகவை எதிர்ப்பார் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை