அண்மை செய்தி

3 லட்சம் செலவு செய்து ரூ.5க்கு விலை போன வெங்காயம்; வேதனையில் ஆடுகளுக்கு உணவாக்கிய விவசாயி!

இந்தியாவில் சீசனுக்கு ஏற்ப வெங்காயம், தக்காளி போன்ற காய்கறிகளின் விலை மாறுபடும். இந்த அசாதாரண விலை மாற்றம் என்பது உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கடும் அவதியை தருவதாக நீண்ட கால புகார் கூறப்படுகிறது. உற்பத்தி செய்த விவசாய பொருட்களை பெரிய சந்தைகளில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் போது அவர்களுக்கு உரிய உள்ளீட்டு தொகை கிடைக்காமல் நஷ்டம் ஏற்படும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
இப்படி தான் தற்போது ஆந்திர மாநிலத்திலும் ஒரு விவசாயி வெங்காய விலை வீழ்ச்சியால் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். வெங்காய விலை வீழ்ச்சியால் விரக்தியடைந்த விவசாயி ஒருவர் தனது நிலத்தில் ஆடுகளை மேயவிட்டார். கர்னூல் மாவட்டத்தில் உள்ள கய்ரவடி கிராமத்தை சேர்ந்த விவசாயி பாலு, தனது ஐந்து ஏக்கர் விலை நிலத்தில் வெங்காயம் பயிரிட்டு இருந்தார்.
தற்போது ஒரு கிலோ வெங்காயம் ஐந்து ரூபாய்க்கு மட்டும் விலை போவதாக கூறப்படுகிறது. மூன்று லட்ச ரூபாய் வரை செலவு செய்து பயிரிட்ட நிலையில் விலை வீழ்ச்சி காரணமாக சந்தைக்கு கொண்டு செல்வது நஷ்டம் என கருதிய அவர், மன உளைச்சலில் தன்னுடைய நிலத்தில் ஆடுகளை மேயவிட்டு வெங்காயத்தை ஆடுகளுக்கு உணவாக்கினார்.

சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களை சந்தித்தார்

🛡️சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களை சந்தித்தார்.

🇮🇳 அண்மை செய்தி 📡🔹🔸 மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!

👉🗳️இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. – இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச்

சென்னை சைதாப்பேட்டை ஜூனிஸ் ரோடு ரயில் நிலையம் அருகில் Tea Heaven கடையை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் திறந்து வைத்தார்

சென்னை சைதாப்பேட்டையில் திமுக மாவட்ட துணை அமைப்பாளர் தொண்டர் அணி சைதை ஜி.வெங்கடேசன்