3 திருமணம் செய்த திருவள்ளூர் மாவட்ட பாஜக நிர்வாகி கைது

சென்னை:
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரமூர்த்தி என்கிற எஸ்.கே.எஸ்.மூர்த்தி (52). ஆவடி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கடைகளில் சிப்ஸ் விநியோகம் செய்யும் வியாபாரம் செய்து வருகிறார். இவர் அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளில் முக்கிய நிர்வாகியாக இருந்தார். பின்னர் அக்கட்சிகளில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த இவர் தற்போது பாஜகவின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணை தலைவராக இருந்து வருகிறார்.
கடந்த 2008ம் ஆண்டு இவர் நளினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2017ம் ஆண்டு தேவிகா (36) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, முதல் மனைவியான நளினியை பிரிந்து, தேவிகாவுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். கணவரின் இந்த செயலால் மனவுளைச்சலுக்கு ஆளான முதல் மனைவி நளினி, கடந்த 2018ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சுந்தரமூர்த்திக்கு பாஜக மகளிர் அணியை சேர்ந்த ஜெனிபர் என்பவருடன் சமீபத்தில் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியதாக தெரிகிறது. இதனையடுத்து, அவர் கடந்த ஜூலை மாதம் ஜெனிபரை 3வதாக திருமணம் செய்து கொண்டார்.
இதை அறிந்த அவரது 2வது மனைவி தேவிகா கடந்த வாரம் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் இது குறித்து புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கல்யாண சுந்தரமூர்த்தி என்ற எஸ்.கே.எஸ் மூர்த்தியை போலீசார் கைது செய்து, ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்பு மகளிர் காவல் ஆய்வாளர் விசாரணை நடத்தி சுந்தரமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்தார். இதையடுத்து, அவர் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பாஜக மாவட்ட துணைத் தலைவர் மூன்றாவது திருமணம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆவடி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்